‘Sorry' கிங் காங்.. பிரியாணி எடுத்து வை.. வீட்டுக்கு வரேன்.. மணமக்களை வாழ்த்திய மன்சூர் அலிகான்!
சென்னை: நடிகர் கிங் காங் மகள் கீர்த்தனா, நவீன் திருமணம் பெசன்ட் நகர் ஆறுபடை முருகன் கோயிலில் நடைபெற்றது. இதன் திருமண வரவேற்பு அசோக் நகரில் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன்,விஷால், டிராஜேந்தர் என பல நடிகர்கள் கலந்து கொண்டனர். இதில், மன்சூர் அலிகான் கலந்து கொள்ள முடியவில்லை என வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார்.
நடிகர் கிங் காங் ரஜினியுடன் அதிசய பிறவி படத்தில் நடித்தன் மூலம் பிரபலமான கிங்காங், அதைத் தொடர்ந்து, சுறா, போக்கிரி, வாத்தியார், கருப்பசாமி குத்தகைக்காரார், இந்திரலோகத்தில் நா அழகப்பன், முனியாண்டி விலங்கியல் ஆகிய படத்தில் நகைச்சுவையில் கலக்கி இருப்பார். இவர் தனது மகளின் திருமணத்திற்காக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, பிரேமலதா விஜயகாந்த், கன்னட நடிகர் ஷிவாராஜ், தமிழிசை, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், யோகிபாபு உள்ளிட்டோருக்கு நேரில் சென்று பத்திரிக்கை வைத்து அழைத்திருந்தார்.

கிங் காங் மகள் திருமணம்: இதைத்தொடர்ந்து, ஜூலை 10ந் தேதி கிங்காங் அவர்களின் மகள் கீர்த்தனாவிற்கும், நவீனுக்கும் பெசன்ட் நகர் ஆறுபடை முருகன் கோயிலில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை அசோக் பில்லர் பகுதியில் இருக்கும் MPK மஹாலில் திருமணம் நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார். அதே போல திருமாவளவன், தமிழிசை சௌந்தரராஜன், நடிகர் விஷால், டி ராஜேந்தர் என பலர் கலந்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு சிவகார்த்திகேயன் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் வரவில்லை.
வீட்டுக்கு வரேன்:இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கிங் காங் 'Sorry' கிங் காங், என்னால் திருமணத்திற்கு வர முடியவில்லை. நான் மதுரையில் ஒரு சூட்டிங் கில் மாட்டிக் கொண்டேன். 14ஆம் தேதி தான் அங்கிருந்து கிளம்புகிறேன் சீக்கிரமாக சூட்டிங் முடியும் திருமணத்தில் கலந்து கொள்ளலாம் என நினைத்தேன். ஆனால் அப்படி செய்ய முடியவில்லை. இது சிறிய பட்ஜெட் படம் என்பதால் இங்கே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. சென்னைக்கு வந்ததும் நிச்சயமாக நான் வீட்டுக்கு வந்து மணமக்களை வாழ்த்துகிறேன். பிரியாணி எடுத்து வை, உன் பொண்ணை வாழ்த்த வீட்டுக்கு வரேன் என வீடியோ வெளியிட்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











