ரஜினிக்கு அடுத்தவன் பொண்டாட்டிதான் செட் ஆகும்.. மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு.. புது பஞ்சாயத்து
சென்னை: மன்சூர் அலிகான் 90களில் பிரபலமான வில்லனாக வலம் வந்தவர். அவரது வித்தியாசமான உடல் மொழியும், நடிப்பும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதன் காரணமாக பிஸியான நடிகராக திகழ்ந்தார். ஒருகட்டத்தில் வாய்ப்புகள் கம்மியானதை அடுத்து அரசியலிலும் அடி எடுத்து வைத்தார். ஆனால் அதிலும் அவரால் சோபிக்க முடியவில்லை. இதற்கிடையே அவர் தொடர்ந்து சர்ச்சையாகவும் பேசிவருகிறார். திரிஷா குறித்து சர்ச்சையாக பேசிய அவர் இப்போது ரஜினிகாந்த் குறித்தும் சர்ச்சையாக பேசியிருக்கிறார்.
கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மன்சூர் அலிகான். முதல் படத்திலேயே வீரப்பன் சாயலை ஒத்திருந்த கதாபாத்திரத்தை ஏற்று அதில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார. அதனைத் தொடர்ந்து அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கிடைத்தன. பல முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார்.

அரசியலில் மன்சூர் அலிகான்: சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த அவர் திடீரென அரசியலிலும் குதித்தார் அவர். நாம் தமிழர் கட்சியில் இணைந்த அவர் நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். அதன் பிறகு திடீரென அக்கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தார். காலப்போக்கில் அந்தக் கட்சியும் காணாமல்போனது.
வைரல் மன்சூர்: நடிப்பு, அரசியலைத் தாண்டி தன்னுடைய செயல்பாடுகளால் அவர் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கக்கூடியவர். அவர் பேட்டி கொடுக்கும்போது அவர் பேசும் முறையும் , அவரது பாடி லாங்குவேஜும், அவரது நடவடிக்கைகளும் பலருக்கு சிரிப்பு வரும்படி அமைந்தது. அப்படிப்பட்ட வீடியோக்களை நெட்டிசன்கள் அதிகம் பார்த்தும், பகிர்ந்தும்வந்தனர். மேலும் அரசியலில் களமிறங்கிய அவர் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
லியோவில் மன்சூர்: லோகேஷ் கனகராஜ் மன்சூர் அலிகானின் ரசிகர். கைதி கதையையும் அவரை மனதில் வைத்துதான் எழுதினார். ஆனால் ஏதோ காரணத்தால் மன்சூரால் நடிக்க முடியவில்லை. இந்தச் சூழலில் அவர் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்திலும், தனது தயாரிப்பில் சராக்கு படத்தில் நடித்திருந்தார். இதற்கிடையே தொடர்ந்து சர்ச்சையாக பேசிவரும் அவர், நடிகைகளுடன் படுக்கை காட்சியில் நிறைய டேக்குகள் வந்தால் ஜாலியாக இருக்கும் என தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார். அதேபோல் திரிஷா குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வம்பில் மாட்டினார்.
ரஜினி பற்றி சர்ச்சை பேச்சு: இந்நிலையில் ரஜினிகாந்த் குறித்து ஒரு விழாவில் பேசிய மன்சூர் அலிகான், "ரஜினிக்கு 70, 80 வயது ஆகிவிட்டது. அதனால் அவருக்கு ஹீரோயின் தேடுவதே மிகவும் கஷ்டம்தான். ஒன்று அடுத்தவன் பொண்டாட்டியா இருக்க வேண்டும். அதாவது 20, 25 வயதில் இருக்கும் ஒருவரை அவருக்கு ஹீரோயினாக்க முடியாது. திருமணமான நடிகைகள்தான் ரஜினிக்கு செட் ஆவார்கள் என்று சொல்கிறேன்.
தவறாக எடுக்காதீர்கள்: யாரும் தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம் உதாரணமாக ஐஸ்வர்யா ராயை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அவருக்கும் இப்போது வயதாகிவிட்டதே. தயாரிப்பாளர்களும் கோடிக்கணக்கில் கொட்டி அவர்களை தேடித்தான் செல்கிறார்கள். இப்படியே போகும்பட்சத்தில் சின்ன பட்ஜெட் படங்களின் நிலைமை படுமோசமாகிவிடும். சின்ன பட்ஜெட் படம் என்று நினைக்காமல் உள்ளே இருக்கும் கதையை பாருங்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











