Mansoor ali khan - என்னை வெச்சு அப்படி ஒரு படம் எடுங்க.. லோகேஷிடம் மன்சூர் அலிகான் லந்து

சென்னை: Mansoor ali Khan (மன்சூர் அலிகான்) லோகேஷ் கனகராஜுக்கு மன்சூர் அலிகான் வைத்த கோரிக்கைகள் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளன.

மன்சூர் அலிகான் 90களில் பிரபல வில்லனாக வலம் வந்தவர். முதல் படத்திலேயே வீரப்பன் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பில் அதகளம் செய்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிய தனது வில்லத்தனமான நடிப்பால் பலரையும் ஆச்சரியப்படுத்தினார். ஒருகட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இருந்தாலும் தனது வெளிப்படையான பேச்சு மற்றும் பேட்டியின்போது அவர் நடந்துகொள்ளும் விதம் ஆகியவற்றால் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருந்தார்.

Mansoor ali khan Demands to Director Lokesh Kanagaraj

லோகேஷ் கனகராஜ் மன்சூர் ரசிகர்: தற்போது மோஸ்ட் வாண்டட் இயக்குநராக இருக்கும் லோகேஷ் கனகராஜும் மன்சூர் அலிகானுக்கு ரசிகர். தன்னுடைய கைதி படத்தின் கதையை மன்சூர் அலிகானை மனதில் வைத்துதான் அவர் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விக்ரம் படத்திலும் மன்சூர் அலிகான் நடனம் ஆடியிருந்த பாடலையும் இடம்பெற செய்திருந்தார்.

லியோவில் மன்சூர்: தொடர்ந்து மன்சூர் அலிகானை பற்றி மேடையில் பேசிவந்த லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடிக்கும் லியோ படத்தில் மன்சூருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். படத்தில் விஜய்யின் லியோ கேரக்டரை ஓபன் செய்யும் நபராக தோன்றி நடித்திருக்கிறார். குறிப்பாக இலையை வைத்து பீப்பி ஊதுவது போன்று அவரது இண்ட்ரோ காட்சியை லோகேஷ் அமைத்திருந்தது தியேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றது.

மன்சூர் அலிகான்: இந்நிலையில் லோகேஷ் கனகராஜிடம் அவர் வைத்திருக்கும் கோரிக்கைகள் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளன. அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவு ஒன்றில், "500 கோடி ரூபாய் முதல் போட்டு லட்சம் பேருக்கு வேலை கொடுத்து ஒன்னரை வருடங்கள் மெனக்கெட்டு 1000 கோடி ரூபாய் வசூலுக்கு பாடுபடுகிறோம்.

என்னை வைத்து படம் எடுங்கள்: ஆனால் அரசியல்வாதியோ ஒரு கையெழுத்து போட்டுட்டு 10,000 கோடி, 20,000 கோடி ரூபாயை ஆட்டைய போட்டுடுறான். லோகேஷ் என்னை வைத்து அந்த மாதிரி ஒரு அரசியல் படம் எடுக்கலாம்ல. அத வுட்டுட்டு தம்மாத்தூண்டு ரோலுக்கு அம்மாம் பெரிய பில்டப்பு. இல்லைனா வாங்க பாலஸ்தீனத்துக்கு விடுதலை வாங்கி கொடுக்கலாம்.

போருக்கு போவோம்: 500 மிலிட்டரி டேங்கர்கள், 500 ஆர்ம்டு ஏர் கிராஃப்ட் எடுத்துட்டு வாங்க. போருக்கு போயி எல்லா மிலிட்டரி தளத்தையும் அழிச்சிட்டு வருவோம். அப்பாவிங்க சாகுறாங்க. சும்மா டம்மி துப்பாக்கி, அட்டக்கத்தியை கையில் குடுத்துக்குட்டு.. வாங்க லோகேஷ் போருக்கு போகலாம்" என குறிப்பிட்டிருக்கிறார். முன்னதாக மன்சூர் அலிகான் சரக்கு என்ற படத்தை தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அது விரைவில் வெளியாகவிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X