இப்தார் விருந்தில் சிக்கிய மன்சூர் அலிகான்.. வாயிலிருந்து எடுத்தது என்ன? அவரே கொடுத்த விளக்கம்!

சென்னை: இப்தார் விருந்தில் கலந்து கொண்ட நடிகர் மன்சூர் அலிகான், தொப்பியால் முகத்தை மறைத்துக்கொண்டு வாயில் இருந்து ஏதோ ஒரு மர்ம பொருளை எடுத்து பாக்கெட்டில் வைத்தார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி பேசுபொருளாகி உள்ள நிலையில், அதுகுறித்து மன்சூர் அலிகான் விளக்கம் கொடுத்துள்ளார்

நடிகர் மன்சூர் அலிகான்: கடந்த வெள்ளிக்கிழமை அம்பத்தூரில் வியாபாரிகள் சங்கம் சார்பில் இப்தான் நோன்பு திறப்பு விழா நடைபெற்றது. இதில, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் மன்சூர் அலிகான், நோன்பு திறக்கும் நேரத்தில் உணவருந்த தயாரானது போது, யாருக்கும் தெரியாமல், தொப்பியை வைத்து முகத்தை மறைத்துக்கொண்டு, வாயிலிருந்து ஏதோ ஒன்றை ரகசியமாக எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டார். இதை யாரும் கவனித்து இருக்க மாட்டார்கள் என அவவர் நினைத்திருந்த நிலையில், அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி மன்சூர் அலிகான் வாயில் வைத்து இருந்தது என்ன? வாயில் இருந்து எதை எடுத்தார்? இப்தார் நோன்பில் இப்படி செய்யலாமா என பலவிதமான கமெண்ட்களை இணையத்தில் பரவியது.

Mansoor Ali Khan pressmeet

விளக்கம்: இதற்கு விளக்கம் கொடுத்துள்ள மன்சூர் அலிகான், வெள்ளிக்கிழமை இப்தார் நோன்பில் கலந்து கொண்டேன். எனக்கு சொத்தை பல் இருப்பதால், பல்லில் ஒரு ஷூவை பொருத்தி இருந்தேன்.அது திடீரென கழண்டு விட்டதால், தொப்பியை வைத்து மறைத்தபடி, அதை எடுத்து பாக்கெட்டில் போட்டேன். அதை வீடியோவாக எடுத்து பதிவிட்டு மன்சூர் அலிகான் வாயிலிருந்து என்ன எடுத்தார் என கேட்கிறார்கள். வாயிலிருந்து லிங்கத்தை எடுக்க நான் என்ன பிரேமானந்தவா? இல்லை நித்தியானந்தா வா? நான் என்னென்னமோ, போதைப்பொருள் பயன்படுத்தியது போல எழுதுகிறார்கள். என் உடம்பில் போதை மருந்தோ, போதை மருந்து தொடர்பாக எந்தவித வஸ்தோ பயன்படுத்தியதே இல்லை,

மக்களுக்கு தெரியும்: என்னை டெஸ்ட் செய்யுங்கள், அப்படி ஏதாவது ஒரு அறிகுறி என் உடம்பில் இருந்தால், இதே இடத்தில் நான் தூக்கில் தொங்கி விடுகிறேன். நான் போதை பொருளுக்கு எதிராக 'சரக்கு' என்கிற படத்தை எடுத்தவன். மக்களுக்கு என்னைப் பற்றிய நன்றாக தெரியும், சொல்பவர்கள் சொல்லிவிட்டு போட்டும் அதைப் பற்றி எனது கவலை இல்லை என்று மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் விளக்கம் கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X