Mansoor Ali Khan: “லியோ பிளாஷ்பேக்ல ஏன் பொய் சென்ன..” நள்ளிரவில் மன்சூர் அலிகானை மிரட்டிய ரசிகர்கள்!
சென்னை: விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவான லியோ திரைப்படம், கடந்த மாதம் வெளியானது.
பாக்ஸ் ஆபிஸில் 550 கோடிக்கும் அதிகமாக வசூலித்த லியோ, தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
இதனையடுத்து இந்தப் படத்தின் வெற்றி விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இதில், ரசிகர்கள் நடு ராத்திரியில் போன் போட்டு மிரட்டுவதாக மன்சூர் அலிகான் பேசியது வைரலாகி வருகிறது.

நடு ராத்திரியில் மன்சூர் அலிகானுக்கு மிரட்டல்
விஜய்யின் லியோ திரைப்படம் கடந்த மாதம் 19ம் தேதி ரிலீஸானது. லோகேஷ் இயக்கிய மூன்றாவது LCU படமாக இது உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதிக எதிர்பார்ப்புடன் வெளியான லியோவுக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. இன்னொரு பக்கம் லோகேஷின் மேக்கிங், கதை, திரைக்கதை ஏமாற்றிவிட்டதாகவும் ரசிகர்கள் கூறி வந்தனர்.
முக்கியமாக லியோ பிளாஷ்பேக் காட்சி குறித்து அதிகம் விமர்சனம் எழுந்தன. லியோ யார், அவனுக்கு என்ன நடந்தது என்பதை மன்சூர் அலிகான் கெளதம் மேனனிடம் சொல்வதாக எடுக்கப்பட்டிருந்தது. இது மன்சூர் அலிகான் பார்வையில் சொல்லப்பட்டதாகவும், பொய்யான பிளாஷ்பேக் எனவும் லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இதனால், லியோவில் உண்மையான இன்னொரு பிளாஷ்பேக் இருப்பதாக சொல்லப்பட்டது.
ஆனால், இதனை நெட்டிசன்கள் ட்ரோல் செய்யத் தொடங்கினர். இதனால், எடிட்டிங்கில் வெட்டி தூக்கப்பட்ட மன்சூர் அலிகான் பேசிய வசனத்தை தயாரிப்பு தரப்பினர் வெளியிட்டனர். இதுவும் ரீ-ஷூட் செய்யப்பட்டது என மீண்டும் ட்ரோல் செய்யப்பட்டது. இந்நிலையில், லியோ வெற்றி விழாவில் பேசிய மன்சூர் அலி கான், ரசிகர்கள் தன்னை நடு ராத்திரியில் மிரட்டுவதாக கலகலப்பாக பேசினார்.

அதாவது லியோ பிளாஷ்பேக்கில் ஏன் பொய் சொன்ன என்று நடு ராத்திரியில் போன் போட்டு ரசிகர்கள் மிரட்டுவதாக மன்சூர் அலிகான் பேசினார். இதனைக் கேட்டதும் லியோ படக்குழுவினர் உட்பட ரசிகர்கள் அனைவரும் அரங்கமே அதிரும்படி புன்னகையுடன் ஆர்ப்பரித்தனர். அதேபோல் அவர் ஜார்ஜ் மரியானின் நெப்போலியன் கேரக்டரையும் கலாய்த்தது ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்தது. இந்த வீடியோக்கள் டிவிட்டர் உட்பட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











