பஞ்சாயத்து இன்னும் முடியலையா? 3 பேரும் தலா ஒரு கோடி கொடுங்கள் மன்சூர் அலிகான் வழக்கு!
சென்னை: நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக மன்சூர் அலிகான் நஷ்ட ஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நடிகர் மன்சூர் அலிகான் அண்மையில் நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி மன்சூர் அலிகானுக்கு பலரும் கண்டனங்கள் குவிந்தன.

மன்சூர் அலிகான் பேச்சை கண்டித்த த்ரிஷா, இனி அவருடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். இதையடுத்து, நடிகை குஷ்பு, சிரஞ்சீவி உள்ளிட்ட பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.
மன்சூர் அலிகான்-த்ரிஷா: இதேபோல மன்சூர் அலிகான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் என்று நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டு இருந்தது, அத்துடன், மன்சூர் அலிகான் மீது தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஏற்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோருக்கு, டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
நேரில் ஆஜராகி விளக்கம்: இதையடுத்து, மன்சூர் அலிகான் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் சர்ச்சை பேச்சு குறித்து விசாரணைக்கு நேரில் ஆஜராகக்கோரி மன்சூர் அலிகானுக்கு போலீசார் சம்மன் அனுப்பியதை அடுத்து அவர் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுத்த மன்சூர் அலிகான், த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு, அறிக்கை வெளியிட்டார்.
மானநஷ்ட வழக்கு: இதற்கிடையில், நடிகை த்ரிஷா மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன் என நடிகர் மன்சூர் அலிகான் கூறியிருந்தார். இதையடுத்து, நடிகைகள் த்ரிஷா, குஷ்பு மற்றும் சிரஞ்சீவிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், த்ரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் தலா ரூ.1 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்து உள்ளார். மன்சூர் அலிகான் தாக்கல் செய்த இந்த வழக்கு வரும் திங்கள்கிழமை நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











