Mansoor Ali Khan - த்ரிஷாவை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை..ரொம்பவே மதிக்கிறேன்..மன்சூர் அலிகான் விளக்கம்
சென்னை: Mansoor Ali Khan Trisha Controversy (மன்சூர் அலிகான் - த்ரிஷா சர்ச்சை) நடிகை த்ரிஷாவை நான் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை என மன்சூர் அலிகான் தெரிவித்திருக்கிறார்.
கோலிவுட்டில் 90களில் பிரபலமான வில்லன் நடிகராக வலம் வந்த மன்சூர் அலிகான் கடைசியாக லியோ படத்தில் நடித்திருந்தார். படம் ரிலீஸாகி டீசண்ட்டான வரவேற்பை பெற்றது. சூழல் இப்படி இருக்க அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "லியோ படத்தில் த்ரிஷாவுடன் பெட் ரூம் சீன், பாலியல் வன்கொடுமை செய்யும் சீன் இருக்கும் என எதிர்பார்த்தேன். குஷ்பூ, ரோஜாவை கட்டிலில் தூக்கிப்போட்டது போல் அவரையும் தூக்கி போடலாம் என்று நினைத்தேன். ஆனால் நடக்கவில்லை" என்றிருந்தார்.

த்ரிஷா எதிர்ப்பு: மன்சூர் அலிகானின் இந்த ஆபாச பேச்சு த்ரிஷாவின் கவனத்துக்கு செல்ல அவர் கடுமையாக எதிர்வினையாற்றினார். குறிப்பாக, மன்சூருடன் இனி இணைந்து நடிக்கவே மாட்டேன். அவர் எல்லாம் மனித குலத்துக்கே இழுக்கு. அவரது பேச்சு பெண்கள் மீதான வெறுப்பை பரப்புவதாக இருக்கிறது என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
திரண்ட திரையுலகம்: த்ரிஷா மட்டுமின்றி திரையுலகிலிருந்து பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். மேலும் தென்னிந்திய நடிகர் சங்கமும் மன்சூர் அலிகானுக்கு கண்டனத்தை தெரிவித்திருந்தது. ஆனால் மன்சூர் அலிகானோ, தன்னிடம் விளக்கம் கேட்காமலேயே நடிகர் சங்கம் கண்டன அறிக்கையை வெளியிட்டிருக்கிறது என்று ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
வழக்க்ப்பதிவு: இதற்கிடையே மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென்று டிஜிபியிடம் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து கோரிக்கை வைத்தது. சூழல் இப்படி இருக்க அவர் மீது ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் நேரில் ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
நேரில் ஆஜர்: இதனையடுத்து மன்சூர் அலிகான் நேற்று காவல் நிலையத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் சில மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதனையடுத்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "நான் த்ரிஷா கிருஷ்ணன் என்பவரை நான் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யவில்லை. அவரை ஒரு நடிகையாக நான் ரொம்பவே மதிக்கிறேன். த்ரிஷா பற்றி பேசியது குறித்து காவல் துறையினர் என்னிடம் பல கேள்விகளை கேட்டார்கள். நான் நடந்ததை சொன்னேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











