என்ன சோனமுத்தா போச்சா?.. தேர்தலில் மண்ணை கவ்விய மன்சூர் அலிகான்.. எவ்வளவு வாக்குகள் தெரியுமா?
சென்னை: தமிழ் சினிமாவின் ஃபேமஸான வில்லனாக வலம் வந்தவர் மன்சூர் அலிகான். ஏராளமான படங்களில் நடித்திருக்கும் அவர் கடைசியாக சரக்கு என்ற படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தை அவரே தயாரிக்கவும் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட அவர்; சமீபத்தில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை தொடங்கி நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிட்டார்.
கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மன்சூர் அலிகான். முதல் படத்திலேயே வீரப்பன் சாயலை ஒத்திருந்த கதாபாத்திரத்தை ஏற்று அதில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார. அதனைத் தொடர்ந்து அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கிடைத்தன. பல முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார்.

அரசியலில் மன்சூர் அலிகான்: சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த அவர் திடீரென அரசியலிலும் குதித்தார் அவர். நாம் தமிழர் கட்சியில் இணைந்த அவர் நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். அதன் பிறகு திடீரென அக்கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தார். காலப்போக்கில் அந்தக் கட்சியும் காணாமல்போனது.
வைரல் மன்சூர்: நடிப்பு, அரசியலைத் தாண்டி தன்னுடைய செயல்பாடுகளால் அவர் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கக்கூடியவர். அவர் பேட்டி கொடுக்கும்போது அவர் பேசும் முறையும் , அவரது பாடி லாங்குவேஜும், அவரது நடவடிக்கைகளும் பலருக்கு சிரிப்பு வரும்படி அமைந்தது. அப்படிப்பட்ட வீடியோக்களை நெட்டிசன்கள் அதிகம் பார்த்தும், பகிர்ந்தும்வந்தனர்.,
லியோவில் மன்சூர்: லோகேஷ் கனகராஜ் மன்சூர் அலிகானின் ரசிகர். கைதி கதையையும் அவரை மனதில் வைத்துதான் எழுதினார். ஆனால் ஏதோ காரணத்தால் மன்சூரால் நடிக்க முடியவில்லை. இந்தச் சூழலில் அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்த அவர் அடுத்ததாக சரக்கு படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தை அவரே தயாரிக்கவும் செய்திருந்தார்.
தனிக்கட்சி: சூழல் இப்படி இருக்க திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கலில் சிக்கினார். பிறகு இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என்று புதிய கட்சியை தொடங்கினார். தொடங்கியதோடு மட்டுமின்றி கூட்டணி ஏதுவும் வைக்காமல் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஆரணி தொகுதியில் தனித்து போட்டியிட்டார். இன்று மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
மன்சூர் அலிகான் மொத்தமாகவே 350 வாக்குகள் மட்டுமே வாங்கி படுதோல்வியை சந்தித்திருக்கிறார். மன்சூர் அலிகான் வாங்கிய வாக்குகளை பார்த்த ரசிகர்கள் என்ன சோனமுத்தா போச்சா என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். தேர்தல் முடிவுகளை பொறுத்தவரை பாஜக கூட்டணி இதுவரை 290 இடங்கள்வரை முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் திமுக 38 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications











