Mansoor Ali Khan On Rajini - ரஜினி மீது செம காண்டுல இருக்கும் லோகேஷ் கனகராஜின் ஃபேவரைட் நடிகர்

சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) ரஜினிகாந்த் மீது கோபமாக இருப்பதற்கான காரணத்தை லோகேஷ் கனகராஜின் ஃபேவரைட் நடிகர் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக இருப்பவர் ரஜினிகாந்த். இதுவரை 169 படங்களில் நடித்திருக்கும் அவருக்கு சாமானியர்கள் முதல் செலிபிரிட்டிகள்வரை பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர். அதுமட்டுமின்றி அவர்தான் தங்களது ரோல் மாடல் என்றும் கூறிவருகின்றனர். அவரது நடிப்பில் கடைசியாக ஜெயிலர் படம் வெளியானது.

 Mansoor Ali Khan has given the reason for being angry with Rajinikanth

ஜெயிலர் ஹிட்: வரிசையாக ஹிட் படங்களாக கொடுத்துவந்த ரஜினிகாந்த்துக்கு கடந்த சில வருடங்களாகவே சரியில்லாமல் இருந்தது. அவர் ஜெயிலருக்கு முன்னர் நடித்த தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்தன. அதன் காரணமாக ரஜினிகாந்த்தின் கதை முடித்துவிட்டதாக பலரும் கூற ஆரம்பித்தனர். இப்படிப்பட்ட சூழலில் ஜெயிலர் கடந்த பத்தாம் தேதி வெளியாகி பெரும் ஹிட்டடித்திருக்கிறது.

ஜெயிலர் வசூல்: ஜெயிலர் படம் இதுவரை 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. கடந்த இரண்டு படங்களும் நூறு கோடி ரூபாயை தொடாததால் ரஜினிகாந்த்தின் சம்பளம் குறைக்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்டது. தற்போது ஜெயிலர் படம் ஹிட்டடித்திருப்பதால் மீண்டும் அவரது சம்பளம் 150 கோடி ரூபாயை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விமர்சனம்: இதற்கிடையே ரஜினிகாந்த்துக்கு தமிழ்நாட்டில் எவ்வளவு ஆதரவு இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் எதுவுமே செய்யவில்லை என்ற விமர்சனமும் எழுவது உண்டு. மக்களுக்குக்கூட ஒன்றும் செய்ய வேண்டாம் அவரது ரசிகர்களைக்கூட அவர் கண்டுகொள்ளவேமாட்டார் என்ற பேச்சு பல காலமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் ரஜினிகாந்த் மீதான கோபத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து நடிகர் மன்சூர் அலிகான் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

மன்சூர் அலிகான் பேட்டி: அந்தப் பேட்டியில் பேசிய அவர், "ரஜினிகாந்த் உச்ச நட்சத்திரம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் படத்தில் மட்டும்தான் அவர் ஹீரோ, சூப்பர் ஸ்டார் எல்லாம். அதுதான் எனக்கு வருத்தமே. நிஜத்திலும் அவர் சூப்பர் ஸ்டாராக இருக்க வேண்டுமென்றுதான் நான் ஆசைப்பட்டேன். தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் அவர் ஏதாவது செய்வார் என்று எதிர்பார்த்தேன். அது நடக்கவில்லை. எனவேதான் அவர் மீது எனக்கு கோபம்.

புனித்தை மறக்கவில்லை: கன்னட சூப்பர் ஸ்டாராக இருந்தவர் புனித் ராஜ்குமார். அவர் அண்மையில் இறந்துவிட்டார். ஆனாலும் இன்றுவரை மக்கள் யாரும் அவரை மறக்கவில்லை. அதற்கு காரணம் பல மக்களுக்கு அவர் உதவிகள் செய்திருக்கிறார். அதனால்தான் நன்றி மறக்காமல் இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டு சூப்பர் ஸ்டார் தமிழ்நாடு மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. நான் அவருடன் படையப்பா படத்தில் நடித்திருக்கிறேன். அவர் மிகச்சிறந்த நடிகர் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. படங்களில் இடதுசாரியாக இருக்கும் அவர் நிஜத்தில் வலதுசாரி" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X