த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்கவில்லை மரணித்துவிடு என்று சொன்னேன்.. மன்சூர் அலிகான் தடாலடி

சென்னை: Mansoor Ali Khan Trisha Controversy (மன்சூர் அலிகான் த்ரிஷா சர்ச்சை) த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்கவில்லை என மன்சூர் அலிகான் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கோலிவுட்டில் கடந்த வாரம் முழுக்க தலைப்பு செய்தியாக இருந்தது மன்சூர் அலிகான். சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்திருந்த அவர், “லியோ படத்தில் த்ரிஷாவுடன் பெட்ரூம் காட்சி, பாலியல் வன்கொடுமை செய்யும் காட்சி இருக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் இல்லை.

Mansoor Ali Khan has said that he did not apologize to Trisha

குஷ்பூ, ரோஜாவை கட்டிலில் தூக்கிப்போட்டது போல் தூக்கிப்போட நினைத்தேன். அதுவும் நடக்கவில்லை” என பேசியிருந்தார்.

த்ரிஷா பதிலடி: மன்சூர் அலிகானின் இந்தப் பேச்சு த்ரிஷா கவனத்துக்கு சென்றது. அதனையடுத்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,”மன்சூர் அலிகானின் பேச்சு அருவருக்கும் வகையில் இருக்கிறது.. பெண்களுக்கு எதிரானதாக இருக்கிறது. அவர் என்னுடன் நடிக்க ஆசைப்படட்டும். இனி நான் அவருடன் நடிக்கவேமாட்டேன். அவர் மனித குலத்துக்கே இழுக்கு” என தெரிவித்திருந்தார்.

வலுத்த எதிர்ப்பு: த்ரிஷா மட்டுமின்றி லோகேஷ் கனகராஜ், குஷ்பூ, கார்த்திக் சுப்புராஜ், பாரதிராஜா, எம்.எஸ்.பாஸ்கர், சிரஞ்சீவி உள்ளிட்ட பலரும் மன்சூருக்கு எதிராக கருத்து தெரிவித்தனர். ஆனால் அவரோ மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்று முறுக்கிக்கொண்டிருந்தார். மேலும் நடிகர் சங்கம் வெளியிட்ட கண்டன அறிக்கைக்கு எதிராகவும் தனது காத்திரமான கருத்தை முன்வைத்திருந்தார்.

வழக்குப்பதிவு: சூழல் இப்படி இருக்க மன்சூர் அலிகான் மீது ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மன்சூரும் நேரில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். அதனையடுத்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த மன்சூர் அலிகான் த்ரிஷாவிடம் மன்னிப்பும் கேட்டிருந்தார். அதனையடுத்து த்ரிஷாவும் மன்சூரின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டார். இதனால் இந்த பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

புதிய பஞ்சாயத்து: இந்நிலையில் மன்சூர் அலிகான் புதிய பஞ்சாயத்து ஒன்றை கிளப்பியிருக்கிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், “பிஆர்ஓவிடம் தொலைபேசி வாயிலாக, அடக்க நினைத்தால் அடங்க மறு.. சக நாயகி த்ரிஷா என்னை மரணித்துவிடு என்று சொன்னதை அவர் மன்னித்துவிடு என்று தவறாக புரிந்துகொண்டார். மரணித்துவிடு என கூறியது மன்னித்துவிடு என்று பிழையாகிவிட்டது. எனக்கே அதை பார்த்து அதிர்ச்சியாகிவிட்டது. மீண்டும் பிரச்னையை வளர்க்க வேண்டாம் என்பதால் அந்த நேரத்தில் அமைதியாக இருந்துவிட்டேன்” என குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X