மத்திய அரசிடம் மாநில அரசு சரண்டர்.. கண்டிப்பாக புரட்சி வெடிக்கும்.. மன்சூர் அலிகான் பரபர பேச்சு
சென்னை: தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகராக வலம் வந்தவர் மன்சூர் அலிகான். பல படங்களில் நடித்த அவர் அரசியலிலும் இருந்தவர். அவருக்கு துக்ளக் என்ற மகன் இருக்கிறார். அவரும் ஒரு சினிமாவில் நடித்துவந்தார். ஆனால் அந்தப் படம் என்ன ஆனது என்று தெரியவில்லை. மன்சூர் அலிகான் கடைசியாக சரக்கு என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தச் சூழலில் அவர் பேசியிருக்கும் விஷயத்தை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
விஜயகாந்த்தின் 100ஆவது படம் கேப்டன் பிரபாகரன். அந்தப் படத்தை ஆர்.கே.செல்வமணி இயக்கியிருந்தார். அதில்தான் மன்சூர் அலிகான் வில்லனாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய அவர் பலரது கவனத்தையும் ஈர்த்தார். மேலும் தமிழ் சினிமாவுக்கு தரமான வில்லன் கிடைத்துவிட்டார் என்றும் பேச்சு எழுந்தது. அதன்படிதான் அவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன. வந்த வாய்ப்புகளை அவரும் சரியாக பயன்படுத்திக்கொண்டார்.
முன்னணி வில்லன் நடிகர்: அதன்படி அவர் ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கெல்லாம் வில்லனாக நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி அவர் தனது வித்தியாசமான உடல் மொழியை கொண்டிருந்ததால் தனித்தும் அறியப்பட்டார். மேலும் சிறப்பாக சண்டையும் செய்யக்கூடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருகட்டத்தில் அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இருந்தாலும் அவர் தொடர்ந்து லைம் லைட்டிலேயே இருந்தார். அதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று அவரது செயல்பாடுகள்தான்.

அரசியலில் என்ட்ரி: சினிமாவிலிருந்து சிறிது காலம் ஒதுங்கிய பிறகு அவர் அரசியலுக்குள் வந்தார். அதன்படி முதலில் அவர் நாம் தமிழர் கட்சியில் இணைந்தார். சில வருடங்களுக்கு முன்பு நடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடவும் செய்தார். பிறகு அந்தக் கட்சியிலிருந்து விலகி புதிதாக ஒரு கட்சி ஆரம்பித்தார். அந்தக் கட்சியின் நிலை என்னவானது என்று தெரியவில்லை. இப்போதும் தான் அரசியலில் இருப்பதாக சொல்லிக்கொண்டு பொது பிரச்னைகளுக்கு குரலும் கொடுத்துவருகிறார்.
லியோவில் மன்சூர்: தற்போதைய சென்சேஷனல் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் லியோ படத்தில் மன்சூரை நடிக்க வைத்தார். பிறகு சரக்கு என்ற படத்தில் நடித்தார். சூழல் இப்படி இருக்க அவர் திரிஷா குறித்து பேசிய ஒரு விஷயம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார் அவர். இது ஒருபக்கம் இருக்க அவரது மகன் போதை பொருள் வழக்கிலும் கைதானது குறிப்பிடத்தக்கது.
மன்சூரின் பேச்சு: இந்நிலையில் இப்போது அவர் சரண்டர் என்ற படத்தில் நடித்திருக்கிறார். நேற்று அந்தப் படக்குழு செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது பேசிய மன்சூர் அலிகான், "மத்திய அரசுக்கு மாநில அரசு சரண்டர். ட்ரம்ப்பிடம் மோடி சரணர். என்னென்ன வரிகளையோ கண்டுபிடிக்கிறார்கள். நிர்மலா சீதாராமன் இதையெல்லாம் எங்கே கற்றுக்கொண்டார் என்று தெரியவில்லை. நன்கு பக்கங்களும் வரிகள் விதிப்பதால் மக்கள் அரசாங்கத்திடம் சரண்டராகியிருக்கிறார்கள். எதிர்வரும் தேர்தலில் மாற்றமும், புரட்சியும் வெடிக்க வேண்டும். அதற்கு இப்படம் முத்தாய்ப்பாய் அமையும்" என்றார்.


Click it and Unblock the Notifications











