என்ன நிகழ்ச்சிடா இது..கூத்தடிக்கிறாங்க..நடிகர் மன்சூர் அலிகான் அதிரடி பதில்!

சென்னை : நடிகர் மன்சூர் அலிகான் பிக் பாஸ் நிகழ்ச்சியை படுமோசமாக விமர்சித்துள்ளார்.

இந்தியில் அமோக வரவேற்பை பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி 15 சீசன்களை கடந்து தற்போது 16வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. அதேபோல தமிழ், தெலுங்கிலும் 5 சீசன்கள் முடிந்து 6வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தாலும், ஒரு சிலர் இதெல்லாம் ஒரு நிகழ்ச்சியா என்று இந்த நிகழ்ச்சியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 6

பிக் பாஸ் சீசன் 6

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது மூன்றாவது வாரத்தில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில்,எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் ஆரம்பமே சண்டை, அழுகை, தள்ளுமுள்ளு என அட்டகாசமாக இருந்தது. அதுமட்டும் இல்லாமல் இந்த சீசனில் பல காதல் ட்ராக் ஓடிக்கொண்டு இருக்கிறது.

ஜிபி முத்து அலப்பறை

ஜிபி முத்து அலப்பறை

இந்த சீசனின் முதல் போட்டியாளராக வந்த ஜிபி முத்து, சூப்பரான என்ட்ரியை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இவர் வந்ததுமே இவருக்கு என்று தனி ஆர்மியை ரசிகர்கள் உருவாக்கி ஜிபி முத்து அலப்பறைகளை ஷேர் செய்து வந்தனர். ஆரம்பத்தில் படு ஆக்டிவாக இருந்த ஜிபி முத்து, பின் மகனை பார்க்க வேண்டும் என அழுது புலம்பி தானாக வெளியேறினார்.

மன்சூர் அலிகான்

மன்சூர் அலிகான்

ஜிபி முத்து வெளியேறியதை அடுத்து, டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்க நடிகர் மன்சூர் அலிகான் உள்ளே வருவதாக பேச்சுக்கள் அடிபட்டன. இதுகுறித்து பேட்டி அளித்துள்ள மன்சூர் அலிகான், இந்த நிகழ்ச்சியில் எனக்கு அழைப்பு வந்தது உண்மைதான். ஆனால், நான் கேட்ட சம்பளத்தை கொடுக்க முன்வராததால், அவர்கள் என்னை மீண்டும் அழைக்கவில்லை.

கூத்தடிக்கிறாங்க…

கூத்தடிக்கிறாங்க…

அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியில் எல்லாரும் உங்காத்துக்கொண்டு கூத்தடிப்பது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்னடா நிகழ்ச்சி இது என்று தோன்றுகிறது. அதுமட்டும் இல்லாமல், நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தால் நான் தான் பிக் பாஸாக இருந்திருப்பேன். விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிகழ்ச்சியாக தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தி இருப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் இதன் மூலம் நடிகர் மன்சூர் அலிகான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக வெளியான தகவல்கள் வதந்தி என்பது தெரியவந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X