நான் என்ன அனாதை பிணமா? மகளிர் ஆணையத்தை விளாசிய மன்சூர் அலிகான்!
சென்னை: திரிஷா குறித்து மோசமான கருத்து தெரிவித்த பிரச்சனையில் சிக்கி இருக்கும் மன்சூர் அலிகான் மகளிர் ஆணையத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மன்சூர் அலிகான் தயாரித்து நடித்திருக்கும் சரக்கு திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், லியோ படத்தில் நடித்தது குறித்து பேசி இருந்தார்.

அதில், திரிஷாவை நான் கண்ணாலக்கூட பார்க்கவில்லை, அவருடன் ஒரு பெட்ரூம் சீன் இருக்கும் என்று நினைத்தேன் அது இல்லாமல் போய்விட்டதாக தெரிவித்து இருந்தார்.
மோசமான பேச்சு: மன்சூர் அலிகானின் இந்த மோசமான பேச்சுக்கு நடிகை த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மன்சூர் அலிகான் விளக்கம்: இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான், நான் திரிஷா பற்றி தவறாக பேசிவில்லை. நான் பேசியதை எடிட் செய்து வெளியிட்டு இருக்கிறார்கள். நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறு செய்துள்ளது. என்னிடம் விளக்கம் கேட்காமலேயே தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. மக்களுக்கு நான் யார் என்பது தெரியும்.
மன்னிப்பு கேட்குற ஜாதி இல்ல: நடிகர் சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். நான் தப்பா பேசி இருந்தால் தானே மன்னிப்பு கேட்கணும்… நான் என்ன மன்னிப்பு கேட்கிற ஜாதியா, நடிகர் சங்கம் இமாலய தவறை செய்து இருக்கிறது. நான் அமைதியாக இருக்கிறேன், எரிமலை குமுறினால் எல்லோரும் ஓடிப்போய் விடுவீர்கள். நடிகர் சங்கம் நான்கு மணிநேரத்தில் அந்த அறிக்கையை வாபஸ் பெற வேண்டும்.
மகளிர் ஆணையம் எங்கு போனது: எஸ் வி சேகர் வேலைக்கு செல்லும் பெண்களை இழிவாக பேசினாரே, அவரை போய் குஷ்பு கைது செய்ய வேண்டுமா இல்லையா? நீட் தேர்வால் மாணவி தற்கொலை செய்து கொண்ட போது மகளிர் ஆணையம் எங்கே போனது, மணிப்பூரில் பெண்களை பலாத்காரம் செய்து பிணத்தையும் விட்டு வைக்காமல் டயர் வைத்து எரித்த போது மகளிர் ஆணையம் என்ன செய்தது. ஆனால், மன்சூர் அலிகானை பார்த்தால் அனாதை பிணமாக தெரிகிறதா என்று மகளிர் ஆணையத்தை கடுமையாக விமர்சித்தார்.


Click it and Unblock the Notifications











