Mansoor AliKhan: “குஷ்பூ, ரோஜா மாதிரி த்ரிஷாவையும் நினைச்சேன்..” ட்ரெண்டாகும் மன்சூர் அலிகான் வீடியோ
சென்னை: விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவான லியோ திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இதில் விஜய் ஜோடியாக த்ரிஷாவும், முக்கியமான கேரக்டரில் மன்சூர் அலிகானும் நடித்திருந்தனர்.
இந்நிலையில், லியோ படத்தில் த்ரிஷாவுடன் பெட்ரூம் சீன் இல்லாமல் போய்விட்டதாக மன்சூர் அலிகான் ஆபாசமாக பேசியிருந்தார்.

இந்த சம்பவம் சர்ச்சையான நிலையில், த்ரிஷா மட்டும் இல்லாமல் குஷ்பூ, ரோஜா பற்றியும் மன்சூர் அலிகான் மிக மோசமாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
ட்ரெண்டாகும் மன்சூர் அலிகான் வீடியோ
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் கடந்த மாதம் 19ம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். பல வருடங்களுக்குப் பின்னர் விஜய் - த்ரிஷா காம்போ லியோவில் இணைந்தது, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல், ப்ளாஷ்பேக் போர்ஷனில் விஜய்யுடன் மன்சூர் அலிகானும் நடித்திருந்தார்.
லோகேஷின் ஃபேவரைட் நடிகர்களில் மன்சூர் அலிகானும் ஒருவர். விக்ரம் படம் வெளியான பின்னர் மன்சூர் அலிகான் பற்றி பேசியிருந்த லோகேஷ், அதன் காரணமாகவே லியோவில் அவரை நடிக்க வைத்திருந்தார். லியோ ப்ளாஷ்பேக் முழுவதும் மன்சூர் அலிகான் சொல்வதாக அமைந்திருக்கும். இந்நிலையில் லியோவில் நடித்த த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் ஆபாசமாக பேசியது சர்ச்சையாகியுள்ளது.
அதாவது லியோ படத்தில் த்ரிஷாவும் நடிக்கிறார் என்றவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. அவ்வளவு அழகான த்ரிஷாவுடன் வில்லனாகிய எனக்கு எப்படியும் ஒரு பெட்ரூம் சீன் இருக்கும். அவரை அப்படியே மெத்தையில் போட்டு ரேப் செய்வதை போல எனக்கு காட்சி இருக்கும் என மிக கொச்சையாக பேசியிருந்தார். மேலும் இப்போதெல்லாம் வில்லனுக்கு இந்த மாதிரி ரேப் சீன் தருவதில்லை எனவும் வேதனையாக குறிப்பிட்டிருந்தார்.
மன்சூர் அலிகானின் இந்தப் பேச்சுக்கு நடிகை த்ரிஷா காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். அதில், மன்சூர் அலிகான் தன்னைப் பற்றி அருவருத்தக்க வகையில் பேசிய வீடியோவைப் பார்த்தேன். பாலியல் ரீதியாக, மரியாதைக் குறைவாக, கேவலமான எண்ணத்துடன் பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன். என்னுடன் நடிக்க வேண்டும் என அவர் ஆசைப்படலாம். இதுவரை அவருடன் சேர்ந்து நடித்ததில்லை என்பதில் நிம்மதி; இனியும் சேர்ந்து நடிக்க மாட்டேன். இவரைப் போன்றவர்கள் மனித குலத்திற்கே அவப்பெயரை ஏற்படுத்துகிறார்கள் என டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.
அதேபோல், மன்சூர் அலிகானின் இந்தப் பேச்சுக்கு லோகேஷ் கனகராஜ்ஜும் கண்டனம் தெரிவித்திருந்தார். நாங்கள் அனைவரும் ஒன்றாக பணிபுரிந்தோம் என்ற அடிப்படையில், த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியதை கேட்டு மனமுடைந்தேன், மிகவும் கோபம் அடைந்தேன். பெண்கள், சக நடிகர்களுக்கான மரியாதை என்பது கட்டாயமாக இருக்க வேண்டும். மன்சூர் அலிகானின் இச்செயலை கண்டிக்கிறேன் என ட்வீட் செய்திருந்தார்.
இந்நிலையில், த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய முழு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில், த்ரிஷாவுடன் நடிப்பதால் அவரை ரேப் செய்வது போல பெட்ரூம் சீன் இருக்கும். குஷ்பூ, ரோஜா மாதிரி த்ரிஷாவையும் ரேப் செய்யும் காட்சி இருக்கும் என நினைத்தேன். 150 படங்களில் பண்ணாத ரேப் சீன்-ஆ, நான் பண்ணாத அட்டூழியமா. த்ரிஷாவின் பாதங்கள் காஷ்மீரில் படாமல் அப்படியே தூக்கிக்கொண்டு போயிருப்பேன் என பேசியுள்ளார்.
த்ரிஷா பற்றி பேசும் போது சந்தடி சாக்கில் குஷ்பூ, ரோஜா குறித்தும் மன்சூர் அலிகான் ஆபாசமாக பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது. அதாவது குஷ்பூ, ரோஜா ஆகியோர் மன்சூர் அலிகானுடன் ரேப் சீனில் நடித்ததையும் மிக கொச்சையாக பேசியுள்ளார். அவரின் இந்தப் பேச்சுக்கு தொடர்ந்து கண்டனங்கள் வலுத்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











