Leo Success Meet: லியோ வெற்றி விழா ஆரம்பம்.. மன்சூர் அலி கான் என்ட்ரி மரண மாஸா இருக்கே!
சென்னை: லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்த நிலையில், லியோ படத்தின் வெற்றி விழா அதே நேரு ஸ்டேடியத்தில் நவம்பர் 1ம் தேதியான இன்று பிரம்மாண்டமாக தொடங்கி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலி கான், அர்ஜுன், சாண்டி உள்ளிட்ட பலர் நடித்த லியோ திரைப்படம் 12 நாட்களில் 540 கோடி வசூலை ஈட்டியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இதுவரை 550 கோடி வசூலை லியோ படம் கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், பிரம்மாண்ட வெற்றி விழா நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.
மன்சூர் அலி கான் என்ட்ரி: லியோ படத்தின் ஃபிளாஷ்பேக் கதையையே இருதயராஜ் டிசோசா கதாபாத்திரத்தில் நடித்த மன்சூர் அலி கான் தான் சொல்வார். அதில், பலருக்கும் திருப்தியில்லாத நிலையில், இது என்னோட பர்ஸ்பெக்டிவ் என மன்சூர் அலி கான் பேசிய நீக்கப்பட்ட வசனத்தையும் நேற்று லியோ படக்குழு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், மன்சூர் அலி கான் லியோ படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சிக்கு முதல் ஆளாக வருகை தந்ததுமே விஜய் ரசிகர்களின் பலத்த கரகோஷம் மற்றும் விசில் மன்சூர் அலி கானுக்கு பறந்த காட்சிகள் வெளியாகி உள்ளன.
அதிரவிட போகிறார்: சும்மாவே ஸ்வாகாக பேசக் கூடிய மன்சூர் அலி கான் ஹேட்டர்களை கண்டிப்பாக தனது பேச்சின் மூலம் நிச்சயம் கதறவிடுவார் என்றே தெரிகிறது. மன்சூர் அலி கான் உடன் ரோகிணி தியேட்டர் ஓனர் ரேவந்த் சரணும் லியோ வெற்றி விழாவுக்கு வருகை தந்துள்ளார்.
அதே லுக்: மன்சூர் அலி கானின் லுக் அப்படியே லியோ படத்தில் இருந்ததை போலவே உள்ளது என்றும் ரீஷூட் கண்டிப்பா நடந்திருக்கும் என்றும் ரஜினி ரசிகர்கள் மன்சூர் அலி கான் வீடியோ டிரெண்டாகி வருவதை பார்த்து ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர். இன்னும் லியோ வெற்றி விழாவில் என்ன என்ன பஞ்சாயத்துகளும் சர்ப்ரைஸ்களும் காத்துக் கிடக்கின்றன என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











