Mansoor ali khan - மனோபாலா நினைவேந்தல் - விஜய், அஜித்தை வம்புக்கு இழுத்த மன்சூர் அலிகான்?

சென்னை: Mansoor Ali khan (மன்சூர் அலிகான்) மனோபாலாவுக்கு நடந்த நினைவேந்தலில் மன்சூர் அலிகான் பேசியது திரையுலகில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்த மனோபாலா ஆகாய கங்கை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன் பிறகு 15க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய அவர் சில சீரியல்களையும் இயக்கியுள்ளார். தொடர்ந்து 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர் கல்லீரல் பிரச்னை காரணமாக சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த மூன்றாம் தேதி உயிரிழ்ந்தார். அவரது உயிரிழப்பு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Mansoor Ali khan open talks about vijan and ajith

மனோபாலாவுக்கு நினைவேந்தல்: இந்தச் சூழலில் நடிகர், இயக்குநர் மனோபாலாவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக சென்னை தியாகராய நகரில் நினைவேந்தல் நிகழ்வு நடந்தது. இதில் திரையுலகை சேர்ந்த கார்த்தி, மன்சூர் அலிகான், பொன்வண்ணன் என ஏராளமானோர் கலந்துகொண்டு மனோபாலா குறித்தும், அவருடனான தங்களது நினைவுகளையும் எமோஷனலாக பகிர்ந்து சென்றனர்.

மன்சூர் அலிகான் பேச்சு: இந்நிலையில் நிகழ்வில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், "இப்படி ஒரு நிகழ்வை நடத்துவதன் மூலம் தென்னிந்திய நடிகர் சங்கம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. நானும் மனோபாலாவும் நிறையவே குசும்பு செய்வோம். அது இண்டஸ்ட்ர்யில் இருக்கும் அனைத்து கதாநாயகிகளுக்கும் நன்றாகவே தெரியும்.

Mansoor Ali khan open talks about vijan and ajith

கோடிகளில் சம்பளம்: நடிகர் சங்கம் நன்றாக துரு பிடிச்சு கெடக்கு. நடிகர்கள் எல்லாம், 40 கோடி, 50 கோடி, 60 கோடி ரூபாய் என சம்பளம் வாங்குகிறார்கள். ஆனாலும் நடிகர் சங்கம் ஏன் துரு பிடிச்சு கிடக்குது என்று எனக்கு தெரியவில்லை. பல அரசியல் சம்பவங்களை நடிகர் சங்கம் செய்தது. மிகப்பெரிய ஜாம்பவான்கள் வாழ்ந்த இடம் இது. நான் நடிகர் சங்கம் கட்டடத்தில் 25 தென்னை மரங்களுடன் பேசுவேன். ஆனால் இப்போது அதெல்லாம் முடியவில்லை. நடிகர் சங்கம் மீண்டும் செயலாற்ற வேண்டும்" என்றார்.

விஜய், அஜித்தை வம்புக்கு இழுத்தாரா? இந்நிலையில் மன்சூர் அலிகானின் பேச்சு விவாதத்தை கிளப்பியுள்ளது. அதாவது, அதிக சம்பளம் வாங்கும் விஜய், அஜித் போன்ற நடிகர்கள் நடிகர் சங்கத்துக்கு எதுவுமே செய்வதில்லை. சொல்லப்போனால் அப்படி ஒரு சங்கம் இருப்பதே அவர்களுக்கு ஞாபகம் இருக்கிறதா என்பதுகூட சந்தேகம்தான் என்ற கருத்தை பலரும் முன்வைப்பார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் இவ்வளவு சம்பளம் வாங்கியும் நடிகர் சங்கம் துரு பிடிச்சு இருக்கு என மன்சூர் பேசியதன் மூலம், அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் நடிகர் சங்கத்துக்கு எதுவுமே செய்யாததால்தான் அது துரு பிடித்திருப்பதாக மறைமுகமாக சாடியிருக்கிறார் என சமூக வலைதளங்களில் சிலர் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். மன்சூர் அலிகான் இப்போது விஜய் நடித்துவரும் லியோ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X