தண்டவாளத்தில் தலை வைத்த மன்சூர் அலிகான்.. கலைஞர் கருணாநிதி போல் இறங்கிட்டாரே ப்பா
திருச்சி: தமிழ் சினிமாவின் ஃபேமஸான வில்லன்களில் ஒருவர் மன்சூர் அலிகான். விஜயகாந்த்துக்கு வில்லனாக அவர் நடித்த கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மெகா ஹிட்டாகி அவருக்கு பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. அதனையடுத்து கோலிவுட்டில் தவிர்க்க முடியாத வில்லன் நடிகர்களில் ஒருவராக மாறினார். இப்போது திரைப்படங்களில் அவருக்கான மார்கெட் இல்லை. இருப்பினும் தொடர்ந்து லைம் லைட்டில்தான் இருக்கிறார். இந்நிலையில் அவரது புதிய செயல் ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த்தின் நூறாவது படமாக உருவானது கேப்டன் பிரபாகரன். அப்படத்தில் வீரபத்ரன் என்ற கேரக்டரில் நடித்து அறிமுகமானார் மன்சூர் அலிகான். முழுக்க முழுக்க ப்ரூட்டல் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ச்சியாக வில்லன் கதாபாத்திரங்கள் வந்தன. மன்சூரும் மிக அருமையாக அந்த ரோல்களை எல்லாம் செய்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

லோகேஷ் கனகராஜின் ஃபேவரைட்: இப்போது சென்சேஷனல் இயக்குநர்களில் ஒருவராக லோகேஷ் கனகராஜும் மன்சூர் அலிகானின் தீவிரமான ரசிகர் ஆவார். முதலில் கைதி படத்தை அவரை வைத்துதான் இயக்குவதாக இருந்தார். ஆனால் அந்த சமயத்தில் சில காரணங்களால் மன்சூர் சிறைக்கு சென்றுவிட கார்த்தியை வைத்து இயக்கினார். அதேபோல் மன்சூர் அலிகான் நடனம் ஆடிய சக்கு சக்கு வத்திக்குச்சி பாடலையும் தான் இயக்கிய விக்ரம் படத்தில் பயன்படுத்தியிருந்தார். மேலும், லியோ படத்திலும் முக்கியமான வேடத்தை கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சைகளில் அலிகான்: மன்சூர் அலிகான் தனது மனதில் பட்டதை பேசிவிடுபவர். அது பல சமயங்களில் அவருக்கு எதிராக திரும்பியிருக்கிறது. லியோ படத்தில் நடித்து முடித்துவிட்டு; சில காலம் கழித்து ஊடகத்திடம் பேசியபோது திரிஷா பற்றி சர்ச்சையான கருத்தை தெரிவித்திருந்தார். அதற்கு திரிஷா உட்பட அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். நிலைமை விபரீதமானதால் தனது வருத்தத்தையும் பதிவு செய்தார். பிறகு ஒருவழியாக அந்த பிரச்னை ஓய்ந்துவிட்டது.
அரசியலில் மன்சூர்: இதற்கிடையே அரசியலுக்கும் வந்தார் அவர். ஆரம்பத்தில் நாம் தமிழர் கட்சிக்கு தனது ஆதரவை கொடுத்து தேர்தலில் களமாடினார். திடீரென அந்தக் கட்சியிலிருந்து விலகி தனி கட்சி ஆரம்பித்தார். அவர் எவ்வளவுதான் அரசியல் களத்தில் பேசினாலும் அவரது பேச்சுக்கள் அனைத்தும் மீம் மெட்டீரியலாகவே அமைந்துவிடுகின்றன. பேச்சுக்கள் மட்டுமின்றி அவரது செயல்பாடும் அப்படித்தான் இருக்கிறது. இந்நிலையில் அவரது புதிய செயல் ஒன்று கலகலப்பை உண்டு செய்திருக்கிறது.
என்ன செய்தார்?: அதாவது தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைக்காக திருச்சிக்கு சென்றார் அவர். அப்போது கல்லக்குடி ரயில் நிலையத்துக்கு சென்று; மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி எப்படி ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தின்போது அந்த ரயில் நிலைய தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தாரோ; அதேபோல் இவரும் செய்தார். நல்வாய்ப்பாக ரயில் எதுவும் வரவில்லை. அவர் இப்படி செய்யும்போது, 'கலைஞர் கருணாநிதியும் இப்படித்தான் செய்தார்' என கூறினார். தற்போது இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications















