Leo Update - லியோ அப்டேட்.. அவசரத்தில் உண்மையை உளறிய மன்சூர் அலிகான்

சென்னை: Leo Update (லியோ அப்டேட்) லியோ படத்தில் நடித்திருக்கும் மன்சூர் அலிகான் அந்தப் படம் குறித்த சில அப்டேட்டுகளை தெரிவித்திருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ்தான் தமிழ் சினிமாவின் தற்போதைய மோஸ்ட் வான்டட் இயக்குநர். அவர் இதுவரை இயக்கிய நான்கு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளன. முக்கியமாக கமல்ஹாசனை வைத்து அவர் இயக்கிய விக்ரம் திரைப்படம் மெகா பிளாக்பஸ்டர் ஆனது. விக்ரம் வருவதற்கு முன்னர் சில காலம் வேற்று மொழி படங்கள் மட்டுமே தமிழில் ஹிட்டாகி வந்த சூழலில் விக்ரமின் வெற்றி தமிழ் சினிமாவிற்கு புத்துணர்ச்சியை கொடுத்தது.

 Mansoor Ali Khan Reveals a Leo Movie Updates

லியோ: லோகேஷ் தற்போது விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கியிருக்கிறார். படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடிந்தது. படமானது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ஏற்கனவே விஜய்யும், லோகேஷும் மாஸ்டர் படத்தில் மெகா ஹிட் கொடுத்ததால் இந்த படமும் மெகா ஹிட் ஆகும் என்ற நம்பிக்கையில் தளபதி ரசிகர்கள் இருக்கின்றனர். அதுமட்டுமின்றி வாரிசு, பீஸ்ட் ஆகிய படங்கள் தோல்வியில் முடிந்ததால் விஜய்க்கும் இந்த படத்தின் வெற்றி அவசியமானதாக பார்க்கப்படுகிறது.

படத்தின் வியாபாரம்: லோகேஷ் கனகராஜ் திறமையான இயக்குனர் என்பதாலும் ஸ்கிரீன் ப்ளேவில் ஏதேனும் புதுமை செய்வார் என்பதாலும் கண்டிப்பாக இந்த படம் மெகா ஹிட் ஆகும் என்ற நம்பிக்கை விஜய்யின் ரசிகர்களுக்கு இருக்கிறது. படத்தின் பட்ஜெட் 350 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இதுவரை 450 கோடி ரூபாயை படத்தில் ப்ரீ பிஸ்னெஸ் நெருங்கி விட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பேட்ச் ஒர்க் இன்னும் பாக்கி இருப்பதால் லோகேஷ் கனகராஜ் தற்போது காஷ்மீரில் இருப்பதாக கோலிவுட்டில் பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

அனுராக் காஷ்யப்: இதற்கிடையே பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் லோகேஷ் கனகராஜினி யுனிவெர்ஸில் இறந்துவிட வேண்டும் என்ற ஆசை. அவரது படத்தில் ஒரே ஒரு ஃப்ரேமில் வந்தால்கூட போதும் என ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதனை எடுத்து அவர் லியோ படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருக்கும் மன்சூர் அலிகான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் லியோ படத்தின் அப்டேட் குறித்து கூறியுள்ளார்.

மன்சூர் அலிகானின் பேட்டி: "லோகேஷ் கனகராஜினி படத்தி ஒரு ஃப்ரேமிலாவது வர வேண்டும் என அனுராக் காஷ்யப் பேட்டி கொடுத்திருந்தார். அதனை இன்னைக்கு மாலை பார்க்கிறேன் என்றால் நாளைக்கு காலை லியோ ஷூட்டிங் ஸ்பாட்ல அவர் இருக்காரு. வந்தாரு பொட்டு பொட்டுனு சுட்டாரு. நான் நன்றாகத்தான் இருக்கிறேன்.லியோவில்கூட ஐந்த, ஆறு பேரை ஒரு சண்டையில் பறக்க விட்டிருக்கிறேன்" என்றார். அவரது இந்தப் பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் மலேசியாவில் நடக்கவிருப்பதாகவும் புதிய தகவல் ஒன்று ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X