»   »  மன் கீ பாத் மோடி அவர்களே... இந்த 'மன்சூர் கீ பாத்'தையும் கேளுங்க!

மன் கீ பாத் மோடி அவர்களே... இந்த 'மன்சூர் கீ பாத்'தையும் கேளுங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பேசும் பிரதமர் மோடி, அந்த மக்கள் பேசுவதையும் கேட்க வேண்டும்.. இந்த ரூபாய் நோட்டு ஒழிப்பு திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு மாற்றம் குறித்த அறிவிப்பால் தமிழ்த் திரையுலகில் 1000 கோடிகளுக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் பழைய ரூபாய் நோட்டுகளை தியேட்டர்களில் அனுமதிக்க வேண்டும் என பிரதமருக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

Mansoor Ali Khan's appeal to PM Modi

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான் கூறுகையில், "பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் திரைப்பட தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மார்ச் 31-ந்தேதிவரை திரையரங்குகளில் பழைய ரூபாய் நோட்டுக்களை வாங்க அனுமதிக்க வேண்டும்.

கருப்பு பணத்துக்கு ஆதரவாகவோ, பிரதமர் மோடி அறிவிப்புக்கு எதிராகவோ இதை கூறவில்லை. சினிமா துறையின் நலன் கருதிதான் இதை சொல்கிறேன். அதை அனுமதித்தால் சினிமா தயாரிப்பாளர்கள் நஷ்டத்தில் இருந்து கொஞ்சமாவது தப்பிப்பார்கள். திரை உலகினர் ஒற்றுமையுடன் இந்த பிரச்சினையை அணுகாதது வருத்தம் அளிக்கிறது.

சொல்லப் போனால், மோடியின் அறிவிப்பு இந்து மதத்துக்கே விரோதமானது. இந்துக்கள் பணத்தைத்தான் மகாலட்சுமி, தனலட்சுமி என்றெல்லாம் வணங்குகிறார்கள். பணத்தை வைத்து வணங்குகிறார்கள். அப்படிப்பட்ட பணத்தை ஒழிக்கலாமா?," என்றார்.

English summary
Actor Mansoor Ali Khan has urged PM Modi to extend the dead line to exchange old rupee notes
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil