கலர்புல் டி-ஷர்ட்டில் ..படு மார்டனாக போஸ் ..மன்சூர் அலிகானின் வேற லெவல் போட்டோஷூட்!

சென்னை : வில்லன் நடிகராக அறிமுகமாகி இப்போது காமெடி கதாபாத்திரங்களில் கலக்கி வருபவர் நடிகர் மன்சூர் அலிகான்.

கேப்டன் பிரபாகரன், தேவா என பல திரைப்படங்களில் மிரட்டும் வில்லனாக நடித்து தமிழ் சினிமாவில் தனது கொடியை பறக்க விட்ட மன்சூர் அலிகான் சமீபத்தில் அட்டகாசமான போட்டோ ஷூட் எடுத்து வெளியிட்டதை தொடர்ந்து இப்பொழுது மீண்டும் ஒரு போட்டோ ஷூட் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகி வருகிறார்.

நடை உடை பாவனை என அனைத்திலும் மற்ற நடிகர்களிடம் இருந்து வித்தியாசமாக தெரியும் நடிகர் மன்சூர் அலிகான் இப்பொழுது பச்சை,மஞ்சள், கருப்பு தமிழன் டா என்றவாறு கலர் கலராக காட்சியளிக்கும் அசத்தலான காஸ்டியுமில் அனைவரையும் மிரள வைக்கும் போட்டோஷூட் எடுத்து இப்பொழுது மீண்டும் வைரலாகி வருகிறார்.

முழுநீள வில்லனாக

முழுநீள வில்லனாக

ஹீரோக்களுக்கு பல ரசிகர்கள் கூட்டம் இருந்து வந்த காலத்தில் வில்லனாக நடித்த மன்சூர் அலிகானுக்கும் பலரும் ரசிகர்களாக இருந்து வந்த நிலையில் ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த மன்சூர் அலிகான் பின் முழுநீள வில்லனாக மக்களிடையே பரிச்சயமானார்.

திருப்புமுனையாக

திருப்புமுனையாக

வேலை கிடைச்சிருச்சு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட மன்சூர் அலிகான்-க்கு விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் என்ற திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

கேப்டன் பிரபாகரன்

கேப்டன் பிரபாகரன்

இயக்குனர் ஆர் கே செல்வமணி இயக்கியிருந்த கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் மிரள வைக்கும் அதிரடி வில்லனாக நடித்திருந்த மன்சூர் அலிகானுக்கு அதைத் தொடர்ந்து பல படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க அடுத்தடுத்து வாய்ப்புகள் வர தொடர்ந்து வில்லனாக எக்கச்சக்கமான திரைப்படத்தில் நடித்தார்.

காமெடி நடிகராக

காமெடி நடிகராக

செம்பருத்தி, பங்காளி, தேவா, தர்மா, வல்லரசு, என் மன வானில் என பல படங்களில் வில்லனாக நடித்திருந்த மன்சூர் அலிகான் சமீப காலமாக ரசிகர்களிடையே காமெடி நடிகராக பிரபலமாகி வருகிறார்.

கலகலப்பான கதாபாத்திரங்களை

கலகலப்பான கதாபாத்திரங்களை

மன்சூர் அலிகானை இதுவரை பலரும் வில்லனாக மட்டும் பார்த்து வந்த ரசிகர்கள் இப்பொழுது காமெடி கதாபாத்திரங்களிலும் அசத்தி வருவதைப் பார்த்த ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு தந்ததை அடுத்து இப்பொழுது தொடர்ந்து கலகலப்பான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

வைரலானது

வைரலானது

அவ்வாறு சமீபத்தில் வெளியான குலேபகாவலி, நானும் ரவுடி தான், சிலுக்குவார் பட்டி சிங்கம், செம உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து வரும் இவர் சமீபத்தில் வெளியிட்டிருந்த அசத்தலான போட்டோஷூட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இப்போது மீண்டும் அட்டகாசமான போட்டோஷுட்டில் கலக்கி வருகிறார்.

Recommended Video

நான் Simbhuவ KISS பண்ணல | Harshika Blasts on fake Gossip | Un Kadhal Irundhal
அசத்தலான காஸ்டியுமில்

அசத்தலான காஸ்டியுமில்

நடை உடை பாவனை என அனைத்திலும் மற்ற நடிகர்களிடம் இருந்து வித்தியாசமாக தெரியும் நடிகர் மன்சூர் அலிகான் இப்பொழுது பச்சை மஞ்ச கருப்பு தமிழன் டா என்றவாறு கலர் கலராக காட்சியளிக்கும் அசத்தலான காஸ்டியுமில் அனைவரையும் மிரள வைக்கும் போட்டோஷூட் எடுத்து இப்பொழுது மீண்டும் வைரலாகி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X