Mansoor Ali khan And Trisha - பெட்ரூம் காட்சி மிஸ் ஆகிடுச்சே.. மன்சூர் அலிகானின் ஆபாச பேச்சு.. த்ரிஷா பதிலடி

சென்னை: Mansoor Ali khan On Trisha (த்ரிஷா பற்றி மன்சூர் அலிகான்) லியோ படத்தில் த்ரிஷாவுடன் பெட் ரூம் காட்சி மிஸ் ஆகிவிட்டதாக மன்சூர் அலிகான் பேசியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்திருந்த படம் லியோ. பெரும் எதிர்பார்ப்போடு கடந்த மாதம் வெளியான இத்திரைப்படம் விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தியது. ஆனால் பொதுவான ரசிகர்களை பெரும்பாலும் கவரவில்லை. அதேசமயம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதுவரை 600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

Mansoor Ali Khan Says he missed the bedroom scene with Trisha in the movie Leo

விஜய் - த்ரிஷா: இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்த காரணங்களில் ஒன்று விஜய்யும் த்ரிஷாவும் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்தது. இருவரும் இதில் கணவன் - மனைவியாக நடித்திருந்தனர். வழக்கம்போல இந்தப் படத்திலும் இரண்டு பேருக்குமான கெமிஸ்ட்ரி பக்காவாக இருந்தது என்று ரசிகர்கள் புகழ்ந்தனர்.

மன்சூர் அலிகான்: அதேபோல் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மன்சூர் அலிகானின் ரசிகர் என்பது அனைவரும் அறிந்தது. அவர் கைதி படத்தைக்கூட மன்சூரை மனதில் வைத்துதான் எழுதியதாக குறிப்பிட்டிருந்தார். சூழல் இப்படி இருக்க லியோ படத்தில் மன்சூர் அலிகான் நடிப்பதற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தார் லோகேஷ் கனகராஜ்.

ஆபாச பேச்சு: இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான் த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசினார். அவர் பேசுகையில், "த்ரிஷாவுடன் நடிக்கிறேன் என்று தெரிந்ததும் கண்டிப்பாக அவருடன் ஒரு பெட்ரூம் சீன் இருக்கும்; குஷ்பூ, ரோஜாவை கட்டிலில் தூக்கிப்போட்டது போல் அவரையும் தூக்கி போடலாம் என்று நினைத்தேன். இத்தனை வருடங்களில் சினிமாவில் நான் பண்ணாத அட்டூழியமா. ஆனால் காஷ்மீரில் த்ரிஷாவை எனது கண்ணிலேயே காட்டவில்லை" என குறிப்பிட்டிருந்தார்.

த்ரிஷா பதிலடி: மன்சூர் அலிகானின் இந்தப் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. த்ரிஷா இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "மன்சூர் அலிகான் என்னை பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோ ஒன்று எனது கவனத்துக்கு வந்தது. அவரது பேச்சினை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஆணாதிக்க மனநிலை மற்றும் அவமரியாதை செய்யும் விதம், பெண் வெறுப்பை பரப்பும் வகையிலும் அவரது பேச்சு இருக்கிறது.

கேவலமான மனிதர்: என்னுடன் நடிக்க அவர் தொடர்ந்து ஆசைப்படட்டும். ஆனால் அவர் போன்ற ஒரு கேவலமான ஒரு மனிதருடன் நான் நடிக்கவில்லை என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இதற்கு மேலும் என்னுடைய கரியர் முழுவதும் அவருடன் நடிக்கமாட்டேன் என்பது உறுதி. இவரைப் போன்றவர்கள் ஒட்டுமொத்த மனித குலத்துக்கு இழுக்கு" என காட்டமாக பதிலடி கொடுத்திருக்கிறார். த்ரிஷாவின் இந்த ட்வீட்டை ரசிகர்கள் வைரலாக்கியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X