Mansoor Ali Khan - த்ரிஷா பற்றி ஆபாச பேச்சு.. தமிழ்நாடே என் பக்கம்தான்.. மன்சூர் அலிகான் அலப்பறை
சென்னை: Mansoor Ali Khan Trisha Controversy (த்ரிஷா - மன்சூர் அலிகான் சர்ச்சை): தன்னை பற்றிய கண்டன அறிக்கையை நடிகர் சங்கம் திரும்ப பெற மன்சூர் அலிகான் 4 மணி நேரம் கெடு விதித்து தமிழ்நாடே தன் பக்கம்தான் என்று தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் தலைப்பு செய்தியாக மாறியிருக்கிறார் மன்சூர் அலிகான். சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசியபோது த்ரிஷா பற்றி ஆபாசமாக பேசினார். அவரது இந்தப் பேச்சு முகம் சுளிக்கும்படி அமைந்து கடுமையான எதிர்வினையை அவருக்கு பெற்று தந்திருக்கிறது. இதனை மன்சூர் அலிகான் கொஞ்சம்கூட எதிர்பார்த்திருக்கமாட்டார் என்பதுதான் உண்மை.

கடும் எதிர்ப்பு: மன்சூர் அலிகானின் அந்தப் பேச்சை கேட்ட த்ரிஷா ஓபனாகவே மன்சூர் அலிகானை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டார். த்ரிஷாவைத் தொடர்ந்து தமிழ் திரையுலகில் லோகேஷ் கனகராஜ், குஷ்பூ, கார்த்திக் சுப்புராஜ், மடோனா செபாஸ்டியன், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.
நடிகர் சங்கம்: இதற்கிடையே தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பிலும் மன்சூர் அலிகானுக்கு எதிராக கண்டன அறிக்கை வெளியிடப்பட்டது. இதனையடுத்து நடிகர் சங்கம் கண்டன அறிக்கை வெளியிட்டதோடு நிறுத்தக்கூடாது; மன்சூருக்கு பாட்ம புகட்டும்வகையில் அவர் நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற குரல்களும் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன. ஆனால் அந்த விஷயத்தில் நடிகர் சங்கம் என்ன முடிவெடுக்கும் என்று தெரியவில்லை.
மன்சூர் அலிகான் பேட்டி: இந்த விவகாரம் பற்றி எரிந்துகொண்டிருக்கும் சூழலில் மன்சூர் அலிகான் இதுவரை மன்னிப்போ, வருத்தமோ கேட்கவில்லை. இந்நிலையில் அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எனக்கு எதிரான கண்டன அறிக்கையை 4 மணி நேரத்தில் திரும்ப பெற வேண்டும். என்னிடம் விளக்கம் கேட்காமலேயே அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். என்னை பலிகடா ஆக்கி நல்ல பெயர் வாங்க நடிகர் சங்கம் முயற்சிக்கிறது. சினிமாவில் ரேப் சீன் என்றால் என்ன உண்மையில் ரேப் செய்வதா.
எனது கை கொஞ்சம் பிரச்னையில் இருக்கிறது. அதனால் சிகிச்சையில் இருக்கிறேன். ஃபோனை ஓபன் செய்ய முடியவில்லை. எங்கு பார்த்தாலும் த்ரிஷாவும் நானும்தான் இருக்கிறோம். ஏன் எனது புகைப்படத்தை நல்ல புகைப்படமாக போட்டிருக்கக்கூடாதா. நடிகர் சங்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் யோக்கிய சிகாமணிகளா?.. அறிவுகெட்ட கூமுட்டைங்க. குறைந்தபட்ச அறிவு வேண்டாமா. தமிழ்நாடே என் பக்கம் இருக்கு. இந்த பூச்சாண்டிகளுக்கு நான் பயப்படமாட்டேன்” என்றார்.


Click it and Unblock the Notifications











