கோலிவுட்டில் பரபரப்பு.. பிரபல நடிகரின் மகன் போதை வழக்கில் கைது.. என்ன ஆச்சு தெரியுமா?
சென்னை: தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகராக வலம் வந்தவர் மன்சூர் அலிகான். பல படங்களில் நடித்த அவர் அரசியலிலும் இருந்தவர். அவருக்கு துக்ளக் என்ற மகன் இருக்கிறார். அவரும் ஒரு சினிமாவில் நடித்துவந்தார். ஆனால் அந்தப் படம் என்ன ஆனது என்று தெரியவில்லை. மன்சூர் அலிகான் கடைசியாக சரக்கு என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தச் சூழலில் துக்ளக்கை காவல் துறையினர் போதை வழக்கில் கைது செய்திருக்கின்றனர்.
விஜயகாந்த்தின் 100ஆவது படம் கேப்டன் பிரபாகரன். அந்தப் படத்தை ஆர்.கே.செல்வமணி இயக்கியிருந்தார். அதில்தான் மன்சூர் அலிகான் வில்லனாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய அவர் பலரது கவனத்தையும் ஈர்த்தார். மேலும் தமிழ் சினிமாவுக்கு தரமான வில்லன் கிடைத்துவிட்டார் என்றும் பேச்சு எழுந்தது. அதன்படிதான் அவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன. வந்த வாய்ப்புகளை அவரும் சரியாக பயன்படுத்திக்கொண்டார்.

முன்னணி வில்லன் நடிகர்: அதன்படி அவர் ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கெல்லாம் வில்லனாக நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி அவர் தனது வித்தியாசமான உடல் மொழியை கொண்டிருந்ததால் தனித்தும் அறியப்பட்டார். மேலும் சிறப்பாக சண்டையும் செய்யக்கூடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருகட்டத்தில் அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இருந்தாலும் அவர் தொடர்ந்து லைம் லைட்டிலேயே இருந்தார். அதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று அவரது செயல்பாடுகள்தான்.
அரசியலில் என்ட்ரி: சினிமாவிலிருந்து சிறிது காலம் ஒதுங்கிய பிறகு அவர் அரசியலுக்குள் வந்தார். அதன்படி முதலில் அவர் நாம் தமிழர் கட்சியில் இணைந்தார். சில வருடங்களுக்கு முன்பு நடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடவும் செய்தார். பிறகு அந்தக் கட்சியிலிருந்து விலகி புதிதாக ஒரு கட்சி ஆரம்பித்தார். அந்தக் கட்சியின் நிலை என்னவானது என்று தெரியவில்லை. இப்போதும் தான் அரசியலில் இருப்பதாக சொல்லிக்கொண்டு பொது பிரச்னைகளுக்கு குரலும் கொடுத்துவருகிறார்.
லியோவில் மன்சூர்: தற்போதைய சென்ஷேஷனல் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் லியோ படத்தில் மன்சூரை நடிக்க வைத்தார். பிறகு சரக்கு என்ற படத்தில் நடித்தார். சூழல் இப்படி இருக்க அவர் திரிஷா குறித்து பேசிய ஒரு விஷயம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார் அவர். இப்படி தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிவரும் அவருக்கு புதிய சிக்கல் ஒன்று மகன் ரூபத்தில் வந்திருக்கிறது.
மகன் துக்ளக் கைது: அதாவது அவருக்கு துக்ளக் என்ற மகன் இருக்கிறார். அவரும் ஒரு சினிமாவில் நடித்தார். ஆனால் அந்தப் படத்தின் நிலை என்னவானது என்று தெரியவில்லை. இந்நிலையில் சென்னையில் சில நாட்களுக்கு முன்பு கஞ்சா, மெத் ஆகிய போதை பொருட்களை விற்றதாக சிலர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களுடன் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக்கிற்கு தொடர்பு இருப்பதாக சந்தேகித்து அவரை விசாரித்தனர். அந்த விசாரணையில் போதை பொருள் விற்ற கும்பலுடன் அவருக்கு தொடர்பு இருப்பது உறுதியானதால் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











