Super Star - வயசானா பட்டத்தை விட்டுக்கொடுத்துடணும்.. அவர்தான் சூப்பர் ஸ்டார்.. லியோ நடிகர் சொன்னதை கேளுங்க

சென்னை: Mansoor Ali Khan (மன்சூர் அலிகான்) வயதானால் பட்டத்தை விட்டுக்குகொடுத்துவிட வேண்டும் என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்திருக்கிறார்.

கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மன்சூர் அலிகான். ஆர்.கே.செல்வமணி இயக்கியிருந்த அந்தப் படத்தில் விஜயகாந்த்தான் ஹீரோவாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே வீரப்பன் சாயலை ஒத்திருந்த கதாபாத்திரத்தை ஏற்று அதில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார் மன்சூர் அலிகான். அதனைத் தொடர்ந்து அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கிடைத்தன. பல முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார்.

Mansoor Ali Khan Speaks about Who is Next Super Star

அரசியலில் மன்சூர் அலிகான்: காலப்போக்கில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். அந்த சமயத்தில் அரசியலிலும் குதித்தார் அவர். நாம் தமிழர் கட்சியில் இணைந்த அவர் நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். அதன் பிறகு திடீரென அக்கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தார்.

வைரலான மன்சூர்: மன்சூர் அலிகான் பேட்டி கொடுக்கும்போது அவர் பேசும் முறையும் , அவரது பாடி லாங்குவேஜும், அவரது நடவடிக்கைகளும் சிரிப்பு வரும்படி அமைந்ததால் சமூக வலைதளங்களில் ட்ரெண்டானார் அவர். அவர் அவ்வாறு செய்யும் வீடியோக்களை நெட்டிசன்கள் சலிக்காமல் பார்த்தும், பகிர்ந்தும் வந்தனர். இதனையடுத்து மீண்டும் லைம் லைட்டுக்கு வந்தார் மன்சூர் அலிகான்.

ரசிகரான இயக்குநர்: தமிழ் சினிமாவில் இப்போது பிரபலமான இயக்குநர் என்று பெயர் எடுத்திருக்கும் லோகேஷ் கனகராஜ் மன்சூர் அலிகானை ரசிக்கக்கூடியவர். ஒரு பேட்டியில் மன்சூர் அலிகான் செய்ததை பல பேட்டிகளில் லோகேஷ் கனகராஜ் பேசியிருக்கிறார். மேலும், கைதி படத்தின் கதையே முதலில் அவருக்காக எழுதி அவரிடம் சொல்வதற்குத்தான் லோகேஷ் திட்டமிட்டிருந்தார் என்பதும் அனைவரும் அறிந்தது. தற்போது அவர் லியோ படத்தில் நடித்திருக்கிறார்.

Mansoor Ali Khan Speaks about Who is Next Super Star

மன்சூர் பேட்டி: இந்நிலையில் மன்சூர் அலிகான் சமீபத்தில் அளித்த பேட்டியில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பஞ்சாயத்து குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "ஹிந்தியில் சூப்பர் ஸ்டாராக திலீப்குமார் இருந்தார். பிறகு ராஜேஷ் கண்ணா வந்தார். தமிழில் தியாகராஜ பாகவதர் இருந்தார். பின் எம்ஜிஆர் வந்தார். அதற்கு பிறகு ரஜினிகாந்த் வந்தார். ஒருவரின் மூன்று படங்கள் வரிசையாக ஓடி வசூலித்துவிட்டால் அவர்தான் உச்ச நட்சத்திரம் என்று கருதப்படுகிறது.

வயதானால் பட்டத்தை விட்டுக்கொடுத்துவிட வேண்டும். ரஜினிகாந்த் ஒரிஜினலாகவும் சூப்பர் ஸ்டாராக இருக்க வேண்டும். படத்தில் மட்டும் இருந்தால் எப்படி. நிஜத்திலும் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் என்றால் அது எம்.ஜி.ஆர் மட்டும்தான்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X