த்ரிஷா சிக்கல.. மடோனா தான் கிடைச்சுது.. லியோ வெற்றி விழாவிலேயே மன்சூர் அலி கான் கொச்சை பேச்சு!
சென்னை: நடிகர் மன்சூர் அலி கான் நடிகை த்ரிஷா பற்றி கொச்சையாக பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் மன்சூர் அலி கானுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விஜய் ஏன் இன்னும் இந்த விவகாரம் தொடர்பாக தனது கண்டனத்தை தெரிவிக்கவில்லை என்றும் மாளவிகா மோகனனை தவிர மற்ற சக நடிகைகளும் த்ரிஷாவிற்கு குரல் கொடுக்கவில்லையே என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

இப்போது மட்டுமல்ல நடிகர் விஜய் முன்னிலையில் லியோ படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியிலேயே மன்சூர் அலி கான் அந்த உள்நோக்கத்துடன் தான் பேசியுள்ளார் என ரசிகர்கள் அவரது வீடியோவை ஷேர் செய்து கண்டித்து வருகின்றனர்.
வழக்கம் போல சீன் இருக்கும்னு நினைச்சேன்: லியோ வெற்றி விழாவில் மன்சூர் அலி கான் ஒரு மார்க்கமாக வந்தபோதே சரக்கு போட்டு ஃபுல் போதையில் வந்திருக்கிறாரா என கேள்விகள் எழுந்தன. மேலும், அவர் பேசும் போது இந்த படத்தில் த்ரிஷா இருக்காருன்னு சொன்னதும் வழக்கம் போல துரத்துற சீன்லாம் இருக்கும்.. ஜாலி பண்ணலாம்னு நினைச்சேன். ஆனால், லோகேஷ் நெருங்கவே விடல என பேசும் போது த்ரிஷாவே சிரித்துக் கொண்டிருந்தார். விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜும் மன்சூர் காமெடியாகத்தான் பேசுகிறார் என ரசித்து சிரித்தனர்.
மடோனா பாப்பா: சரி த்ரிஷா தான் கிடைக்கலன்னு இருந்தா மடோனா பாப்பா வந்தாங்க.. மடோனா வந்துட்டாங்க அவங்களோட ஏதாவது விளையாடலாம்னு பார்த்தா கடைசியில தங்கச்சி ரோல் என அதே இன்டென்ஸ் உடன் அந்த பலாத்கார சீன் என்கிற வார்த்தை மட்டும் பெரிய மேடை கருதி மனதுக்குள்ளே எடிட் செய்துக் கொண்டு மன்சூர் அலி கான் பேசியுள்ளார் என தற்போது அந்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மடோனா அப்பவே அப்செட்: மடோனா பாப்பா என்றும் அவருடன் ஜாலியா விளையாடணும் என பேசும் போதே மடோனா செபாஸ்டியனின் முகம் டோட்டலாக மாறி விட்டது. கண்டிப்பாக தப்பாக மன்சூர் அலி கான் சமீபத்திய வீடியோவில் த்ரிஷா பற்றி பேசும் போது அவருடன் பலாத்கார சீனில் நடிக்க முடியலையேன்னு பேசியிருந்தால் நிச்சயம் திட்டு விழுந்திருக்கும் என்றும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
மன்சூர் அலி கானின் சரக்கு படத்தை புறக்கணிக்க வேண்டும் என்றும் இனிமேல் எந்தவொரு சினிமா பிரபலமும் இந்த மாதிரி கேடு கெட்ட புத்திக் கொண்ட மன்சூர் அலி கானை படங்களில் சேர்க்க கூடாது என்றும் நடிகைகள் பற்றிய தப்பான பார்வை மட்டுமே இவருக்கு உள்ளது எனக் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











