Mansoor Ali Khan: கள்ளச்சாராய மரணம்.. அதுதான் தீர்வு.. மன்சூர் அலிகான் வேதனை!
சென்னை: டி.டி.சினிமா ஸ்டுடியோ பட நிறுவனம் தயாரித்துள்ள புதிய படம்,சூரியனும் சூரியகாந்தியும். இப்படத்தில், காது கேளாத இளைஞர் ஶ்ரீ ஹரி கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய மன்சூர் அலிகான், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தில் பலர் உயிரிழந்துள்ளார்கள், அதைவிட மோசமானது மது, இந்த மரணத்தோடு மதுக்கடைகளை மூடவேண்டும் என்றார்.
சூரியனும் சூரியகாந்தியும்,படத்தில், அப்புக்குட்டி, விக்ரம் சுந்தர் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். ரிதி உமையாள் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சந்தான பாரதி, செந்தில் நாதன், ராஜசிம்மன், ஏ.எல்.ராஜா, மங்களநாத குருக்கள், அழகு, சேஷு, குப்புசாமி, உடுமலை ரவி, சச்சின், ரேவதி, ரிந்து ரவி ஆகியோர் நடித்துள்ளார்கள்.

சூரியனும் சூரியகாந்தியும்: இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, ஏ.எல்.ராஜா இயக்கியுள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவை திருவாரூர் ராஜா கவனிக்க, ஆர்.எஸ்.ரவி பிரியன் இசையமைத்துள்ளார் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், மன்சூர் அலிகான், இயக்குநர் பேரரசு, கூல் சுரேஷ் மற்றும் நடிகர், நடிகைகள் பலர் கலந்து கொண்டனர்.
சாதி தேவைப்படுகிறது: இதில் பேசிய மன்சூர் அலிகான், சமூகநீதி பற்றி ரொம்ப பேசுகிறார்கள். பல இயக்குநர்கள் சாதியில்ல, சாதியில்லை என்று பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், இட ஒதுக்கீட்டுக்காக, கல்விக்காக இன்று சாதி தேவைப்படுகிறது. பேரரசு அவர்கள் முன்னாள் நீதிபதி சந்துரு பற்றி பேசினார். அவர் யார் என்ன, அவர் என்ன பேசினார் என்பதை தெரிந்துகொண்டு பேசுங்கள். சந்துரு என்பவர் ஒரு மாபெரும் மனிதன், ஒரு சமூக நீதி, அவரை வைத்துத்தான் ஜெய்பீம் என்ற படத்தை எடுத்தார்கள்.
அனைவரும் சாதி வேண்டாம், சாதி வேண்டாம் என்று சொல்லுகிறார்கள் அப்புறம் ஏன் நிர்மலா சீதாராமனை அங்க வைத்து இருக்கிறீர்கள். அந்த இடத்தில் பொன் ராதா கிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜனை போடவேண்டியது தானே, அந்த சாதிக்காரர்களே அந்த இடத்தில் இருக்க வேண்டுமா? என்றார்.
எல்லாமே பில்டப் தான்: தொடர்ந்து பேசிய மன்சூல் அலிகான், ஒரு படத்தை 70 கோடி, 80 கோடிக்கு எடுக்கிறார்கள். மக்கள் காசை எல்லாம் கபளிகரம் பண்ணி அரோகரா, இப்போது ரஜினிசார் பாவம் அவருக்கு இப்போது ஹீரோயின் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது. ஐஸ்வர்யா ராய்க்கும் இப்போது வயதாகிவிட்டதால், ரஜினிக்கு ஹீரோயின் இல்ல, ஆனால், அவர்களை நடிக்க வைத்தாக வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் நினைப்பதால், இதுபோன்ற படங்கள் எல்லாம் நாசமா போகுது. இப்படி பில்டப்பில் தான் சினிமா போய்க் கொண்டு இருக்கிறது.
மதுக்கடையை இழுத்து மூடுங்கள்: இன்றைக்கு விஷச்சாராயம் குடித்தவர்கள் உடனே இறந்துவிட்டார்கள். ஆனால், நாட்டில் பல இடத்தில் மது விற்கிறார்கள், அதை குடிப்பவர்கள் இரண்டு வருடம் கழித்து இறப்பார்கள். தற்போது பேசிக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் தமிழ்நாட்டில் பலர் இறந்து இருப்பார்கள். ஆனால் அது வெளியில் தெரிவது இல்லை. மதுவை ஒழிக்க வேண்டும். தென்னை மரம், பனைமரம் வருகிறது அதில் இருந்து கள்ளை மதுபானமாக ஆக்குங்கள். இந்த மரணத்தோட மதுக்கடைகளை மொத்தமாக இழுத்து மூடுங்கள் என்றார்.


Click it and Unblock the Notifications











