பிரபு தேவாவை மறக்க முடியாத நயன்தாரா! மன்சூர் அலிகான் அதிரடி
காதல் முறிவுக்குப் பின்னரும் பிரபுதேவாவை மறக்க முடியாமல் நயன்தாரா தவிக்கிறார் என்று நடிகர் மன்சூர் அலிகான் புது குண்டு ஒன்றை போட்டிருக்கிறார்.
நயன்தாராவின் கையில் பிரபு என்ற பெயர் பச்சைக் குத்தப்பட்டிருக்கும். இது இருவரும் காதலில் இருந்த போது குத்தியது. இருவரும் இப்போது பிரிந்து விட்டார்கள். ஆனாலும் நயன்தாராவின் பச்சையை தொடர்பு படுத்தி பேசியுள்ளார் நடிகர் மன்சூர் அலிகான்.
நாகர்ஜூனா - நயன்தாரா நடித்த 'கிரீக் வீருடு' படம் தமிழில் 'லவ் ஸ்டோரி' என்ற பெயரில் வெளியாகிறது. இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. விழாவின் மன்சூர் அலிகான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசினார். விழா மேடையில் வைக்கப்பட்ட பேனரில் நயன்தாராவின் கையில் பிரபு என்ற பச்சைக்குத்தப்பட்டது பெரிதாக தெரிந்தது.அதைப் பார்த்த உடன் டிராக் மாறிவிட்டார் மன்சூர் அலிகான்.

ராசியான நயன்தாரா
நயன்தாரா ராசியான நடிகை. அவர் நடித்த எல்லாப் படங்களும் வெற்றி அடைகிறது. அதனால்தான் அவரை ராசியான நடிகை என்கிறேன்.

பச்சை குத்திய ராசி
அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. அப்புறம் பேசியதுதான் ட்விஸ்ட். பிரபு என்று பிரபுதேவாவின் பெயரை பச்சைக்குத்திய நயன்தாரா அதனை இன்னமும் அளிக்காமல் வைத்திருக்கிறார்.

மறக்க முடியவில்லை
இன்னமும் அவரால் பிரபுதேவாவை மறக்க முடியவில்லை என்பதை அதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் என்று கூறி அதிரவைத்தார்.

ரூ.15 கோடி சம்பளம்
நயன்தாராவின் ராசியால்தான் பிரபுதேவா இந்திப் பட உலகிற்குப் போய் ரூ.15 கோடி சம்பளம் வாங்குகிறார் என்றார்.

என் பேரை பச்சைக் குத்தலையே
பிரபு தேவாவைப் போல என்னோட பேரை யாரும் பச்சைக்குத்தலயே என்று கூறி ஆதங்கப்பட்ட மன்சூர் அலிகான்
கடைசி வரை லவ் ஸ்டோரி படத்தின் பாடலைப் பற்றி ஒரு வரி கூட பேசவில்லை.


Click it and Unblock the Notifications











