லியோ படத்தில் நடிச்சதே தப்பு.. நான் மன்னிப்பு கேட்குற ஜாதி இல்ல.. மன்சூர் அலிகான் பேட்டி!
சென்னை: தப்பு செய்தால்தானே மன்னிப்பு கேட்கணும், நான் மன்னிப்பு கேட்குற ஜாதி இல்ல என்று மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
மன்சூர் அலிகான் அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பில் திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் புயலை கிளப்பியது.

இதற்கு த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
மன்சூர் அலி கான்: இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு தொலைபேசி மூலம் விளக்கம் கொடுத்துள்ள மன்சூர் அலிகான், அந்த பேட்டியில் நான் திரிஷாவை பற்றியோ மற்ற எந்த நடிகைகள் பற்றியோ தவறாக எதுவும் பேசவில்லை. அந்த வீடியோவை எடிட் செய்து போட்டு இருக்கிறார்கள். அந்த வீடியோவை முழுசா பார்த்த நான் பேசியது என்ன என்று தெரியவரும்.
நகம் கூட படாது: நானும் பல திரைப்படங்களை எடுத்து இருக்கிறேன், படப்பிடிப்பு முடிந்தவுடன் அந்த நடிகை பத்திரமாக வீட்டுக்கு போய்விட்டார்களா என்று பார்ப்பேன். சினிமாவை தாண்டி அவர்கள் மீது என் நகம் கூட பட்டது இல்லை, அப்படித்தான் நான் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறேன். நான் ஒரு நடிகராகத்தான் என் கருத்தை பகிர்ந்தேன். ஆனால், என்னை அரசியல் ரீதியாக பழிவாங்க வேண்டும் என்று இதை செய்கிறார்கள்.
பழிவாங்க பார்க்கிறார்கள்: நாட்டில் எத்தனையோ பிரச்சனை இருக்கும் போது இந்த பிரச்சனையை பெரிசாக்கி, அரசியல் ரீதியாக என்னை ஒழிக்கப் பார்க்கிறார்கள். மேலும், த்ரிஷா இனிவரும் நாட்களில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்று சொன்னது மன வருத்தத்தை தருகிறது. நான் அந்த அளவுக்கு மோசமான ஆளா. ஏன்டா லியோ படத்தில் நடித்தோம், இந்த படத்தில் நடிக்காமலே இருந்து இருக்கலாம் என்று தான் தோன்றுகிறது.
நான் மன்னிப்பு கேட்கிற ஜாதியா: எடிட் செய்த வீடியோவை பார்த்து நடிகர் சங்கம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. நான் தப்பு செய்தால் தானே மன்னிப்பு கேட்க வேண்டும், நான் மன்னிப்பு கேட்கிற ஜாதியா… மன்னிப்பு கேட்கிற மனுஷனா… இதுகுறித்து நடிகர் சங்கத்திடம் பேசி இருக்கிறேன். அங்கு த்ரிஷாவை வரவைத்து நான் பேசிய முழு வீடியோவையும் போட்டு காட்டுவேன், அப்போது தான் அவங்களுக்கு உண்மை புரியும் என்றார்.


Click it and Unblock the Notifications











