த்ரிஷா பற்றி ஆபாச பேச்சு.. மன்சூர் அலிகானுக்கு ஆப்பு.. தேசிய மகளிர் ஆணையத்தின் அதிரடி முடிவு

சென்னை: Mansoor Ali Khan Trisha Controversy (த்ரிஷா - மன்சூர் அலிகான் சர்ச்சை): த்ரிஷா பற்றி நடிகர் மன்சூர் அலிகான் ஆபாசமாக பேசிய விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் அதிரடி முடிவு எடுத்திருக்கிறது.

லியோ திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகி விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்த லியோ வசூல் ரீதியாக நல்ல விதமான ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது. 24ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திலும் படம் வெளியாகவுள்ளது.

Mansoor Ali Khan Trisha Controversy National Commission for Women directs DGP to take action

மன்சூரின் ஆபாச பேச்சு: இந்த சூழலில் சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், “த்ரிஷாவுடன் நடிக்கிறேன் என்று தெரிந்ததும் கண்டிப்பாக அவருடன் ஒரு பெட்ரூம் சீன் இருக்கும்; குஷ்பூ, ரோஜாவை கட்டிலில் தூக்கிப்போட்டது போல் அவரையும் தூக்கி போடலாம் என்று நினைத்தேன். 150 சினிமாக்களில் நான் பண்ணாத அட்டூழியமா. ஆனால் காஷ்மீரில் த்ரிஷாவை எனது கண்ணிலேயே காட்டவில்லை” என குறிப்பிட்டிருந்தார்.

த்ரிஷா பதிலடி: மன்சூர் அலிகானின் இந்தப் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. த்ரிஷா இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “மன்சூர் அலிகான் என்னை பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோ ஒன்று எனது கவனத்துக்கு வந்தது. அவரது பேச்சினை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஆணாதிக்க மனநிலை மற்றும் அவமரியாதை செய்யும் விதம், பெண் வெறுப்பை பரப்பும் வகையிலும் அவரது பேச்சு இருக்கிறது. அவர் மனிதகுலத்துக்கே இழுக்கு” காட்டமாக பதிலடி கொடுத்தார்.

அலட்சிய விளக்கம்: த்ரிஷா மட்டுமின்றி திரையுலகில் இருந்து பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்துவருகின்றனர். ஆனால் விஜய் இன்னமும் வாய் திறக்கவில்லை. இதற்கிடையே தனக்கு எதிராக கண்டனங்கள் வலுத்ததை அடுத்து நேற்று ஒரு விளக்கம் அளித்திருந்தார் மன்சூர்.அந்த விளக்கத்தில் தான் பேசியதற்கு வருத்தமோ, மன்னிப்போ கேட்காமல் படு அலட்சியமாக விளக்கமளித்திருந்தார்.

தேசிய மகளிர் ஆணையம்: மன்சூர் அலிகானின் பேச்சு எப்படி கண்டனத்தை பெற்றதோ அதேபோல் அவரது அலட்சிய விளக்கமும் கடும் எதிர்ப்பினை சந்தித்தது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் அதிரடி முடிவெடுத்திருக்கிரது. அதாவது த்ரிஷா பற்றி ஆபாசமாக பேசிய மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென தானாக முன் வந்து டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. இதனை பார்த்த பலரும் மன்சூருக்கு ஆப்பு ரெடியாகிவிட்டது என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X