GOAT-னா ஆடு தான்.. பிரியாணி போட்டு போயிட்டே இருப்போம்.. விஜய் அரசியலையும் விளாசிய மன்சூர் அலி கான்!
சென்னை: மன்சூர் அலி கான் தனது கட்சி சார்பாக நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஜய்யின் அரசியல் குறித்தும் கோட் படத்தில் அவர் பிசியாக இருக்கிறார் என்றும் பேசி விமர்சித்து இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. புதிதாக வருபவர்களை எல்லாம் வைத்து எங்களுடன் கம்பேர் பண்ணாதீங்க நான் 40 வருஷமா அரசியல்ல இருக்கேன் என மன்சூர் அலி கான் அதிரடியாக பேசியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா நடித்து கடந்த ஆண்டு வெளியான லியோ படத்தில் மன்சூர் அலி கானுக்கு நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், தனது சரக்கு படத்தின் விளம்பரத்தின் போது நடிகை திரிஷாவை பற்றி மன்சூர் அலி கான் பேசியது பெரிய சர்ச்சையை கிளப்பியது.

கோபப்பட்ட திரிஷா: பலாத்கார காட்சிகளில் திரிஷாவுடன் நடிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றும் அந்த காலத்தில் குஷ்பு, ரோஜா உள்ளிட்ட நடிகைகளுடன் பலாத்கார காட்சிகளில் நடித்திருக்கிறேன். அப்படியே கட்டிலில் தூக்கிப் போட்டு நடிப்பேன். ஆனால், திரிஷாவை அனுமார் சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு சென்றது போல அலேக்காக தூக்கிட்டுப் போயிட்டாங்க என மன்சூர் அலி கான் பேசிய வீடியோவை பார்த்த நடிகை திரிஷா இவ்ளோ கீழ்த்தரமான புத்தி கொண்ட நபருடன் இனிமேல் நான் நடிக்க மாட்டேன் என கொந்தளித்து ட்வீட் போட்டிருந்தார். அந்த ட்வீட்டுக்கு ஆதரவாக லோகேஷ் கனகராஜ், குஷ்பு உள்ளிட்ட பலர் மன்சூர் அலி கானை விளாசினர்.
மன்னிப்புக் கேட்டுவிட்டு மீண்டும் வழக்கு: அந்த பிரச்சனை காரணமாக மன்சூர் அலி கான் மீது வழக்கு தொடரப்பட்டது. காவல் நிலையத்துக்கு எல்லாம் சென்று விளக்கம் கொடுத்து வந்த மன்சூர் அலி கான் மன்னிப்பு கேட்டிருந்தார். அதை பார்த்த திரிஷா மன்னித்து விட்டேன் என பதிவிட்டார். ஆனால், அதன் பின்னர் தான் மன்னிப்பு கேட்கவில்லை என்றும் மரணித்து விடு என்று தான் சொன்னேன் என மீண்டும் பஞ்சாயத்தை கிளப்பி திரிஷா மீது வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றத்தில் அதற்காக மன்சூர் அலி கானுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
நோட், புத்தகம் கொடுக்க அரசியல் நடத்தல: கொஞ்சம் அரிசி, காய்கறி, நோட்டு புத்தகம் கொடுக்க நான் ஒன்றும் அரசியல் கட்சி நடத்தல என சமீபத்தில் நடிகர் விஜய் திருநெல்வேலியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்த நிவாரண உதவிகளை கடுமையாக விமர்சித்து மன்சூர் அலி கான் பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
கோட் பிரியாணி போட்டுருவோம்: அத்துடன் நிறுத்தாமல் விஜய் கோட் படத்தில் பிசியாக இருக்கிறார் என்றும் கோட்னாலே ஆடுதான் ஞாபகத்துக்கு வருது, அப்படியே பிரியாணி போட்டு விட்டு போயிடுவோம் என மன்சூர் அலி கான் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், தம்பி விஜய் அரசியலுக்கு வருவதை நான் ஒன்றும் தடுக்கல, வரவேற்கிறேன். நான் 40 வருஷமா அரசியல் நடத்துறேன், புதிதாக வருபவர்களுடன் என்னை கம்பேர் பண்ணி பேசாதீங்க என்றும் மன்சூர் அலி கான் கூறியுள்ளார்.
டிரெண்டிங்கில் தலைவர் விஜய்: மன்சூர் அலி கான் பேசிய வீடியோவை ஷேர் செய்து ரஜினிகாந்த் ரசிகர்கள் மற்றும் அஜித் ரசிகர்கள் ட்ரோல் செய்து வரும் நிலையில், #தலைவர்விஜய் ஹேஷ்டேக்கை போட்டு விஜய் ரசிகர்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











