Mansoor Ali Khan: த்ரிஷா பற்றி அவதூறு பேச்சு.. காவல் நிலையத்தில் நேரில் ஆஜரானார் மன்சூர் அலிகான்!
சென்னை: மன்சூர் அலிகான் நடித்துள்ள சரக்கு திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், சமீபத்தில் அந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து அவதூறாக பேசியது சர்ச்சையை கிளப்பியது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் மன்சூர் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் தனக்கு வில்லன் வேடம் என்றதுமே ஹீரோயின் த்ரிஷாவை சேஸ் பண்ணி, பலாத்கார காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நினைத்தேன். ஆனால் லோகேஷ் கனகராஜ் அப்படி எல்லாம் சீன் வைக்காமல் தன்னை ஏமாற்றி விட்டார் என்றும் மடோனா செபாஸ்டின் பாப்பாவை தனக்கு தங்கை கதாபாத்திரம் என கூறிவிட்டார் என்றும் பேசியது தீயாக பரவியது.

த்ரிஷா கண்டனம்: நடிகை த்ரிஷா அந்த வீடியோவை பார்த்த நிலையில், மன்சூர் அலிகான் பேச்சுக்கு தனது கடும் கண்டனத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகை மாளவிகா மோகனன், கார்த்திக் சுப்புராஜ், நடிகை குஷ்பு, பாடகி சின்மயி உள்ளிட்ட பலர் ஆரம்பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தனர்.
நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசவில்லை என்றும் தனது பேச்சை எடிட் செய்து அந்த யூடியூப் சேனல் போட்டுவிட்டது என்றும் கூறிய மன்சூர் அலிகான் தனது பேச்சுக்கு த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கூறியிருந்தார். இதனால் பஞ்சாயத்து பூதாகரமாக வெடித்த நிலையில், தேசிய மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட்டு வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் நடிகர் சங்கமும் மன்சூர் அலிகான் பேச்சுக்கு கண்டனம் விதித்துள்ளது.
மன்சூர் அலிகான் காவல் நிலையத்தில் ஆஜர்: இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி மன்சூர் அலிகான் விளக்கம் அளிக்க வேண்டும் என டிஜிபி சங்கர் ஜீவால் அறிவுறுத்தியிருந்தார். தனக்கு உடல் நலம் சரியில்லை என்றும் இன்று ஆஜராக முடியாது என்றும் மன்சூர் அலிகான் தெரிவித்த நிலையில், அவர் தலைமறைவு ஆகிவிட்டார் என வதந்திகள் கிளம்பின.
இந்நிலையில், இன்று மதியம் 2:30 மணி அளவில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் நேரில் ஆஜராகி உள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக இது தொடர்பாக நடிகை த்ரிஷாவிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











