Mansoor AliKhan: இனி லோகேஷின் LCU-ல் வாய்ப்பே இல்ல... மன்சூர் அலிகானுக்கு ஆப்பு... தெறிக்கும் மீம்ஸ்

சென்னை: விஜய் - லோகேஷ் கூட்டணியில் வெளியான லியோ படத்தில் மன்சூர் அலிகான் நடித்திருந்தார்.

லியோவில் நடித்தது முதல் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்த மன்சூர் அலிகான், இப்போது மிகப் பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Mansoor AliKhan: Mansoor Ali Khan Should Be Out Of Leo 2 and Upcoming LCU Movies

நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசியதால் மன்சூர் அலிகானுக்கு தொடர்ந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், இனிமேல் லோகேஷின் LCU படங்களில் மன்சூர் அலிகானுக்கு வாய்ப்பே இல்லை என்பதாக மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.

மன்சூர் அலிகானுக்கு ஆப்பு
விஜய்யின் லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம், கடந்த மாதம் 19ம் தேதி வெளியானது. பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் விஜய் ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். அதேபோல், விஜய்யுடன் மன்சூர் அலிகானும் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார்.

லியோ யார் என்ற ப்ளாஷ்பேக்கை மன்சூர் அலிகான் விவரிப்பதாக தான் லோகேஷ் படமாக்கியிருந்தார். இந்நிலையில், லியோ படத்தில் த்ரிஷா நடித்தது குறித்து மன்சூர் அலிகான் ஆபாசமாக பேசியது சர்ச்சையாகியுள்ளது. தான் வில்லன் நடிகர் என்பதால், லியோவில் த்ரிஷாவை ரேப் செய்வதாக சீன் இருக்கும் என எதிர்பார்த்ததாக பகிரங்கமாக பேசியிருந்தார்.

மன்சூர் அலிகானின் இந்தப் பேச்சுக்கு நடிகை த்ரிஷா காட்டமாக பதிலடி கொடுத்திருந்தார். அதேபோல், லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்ஜும் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். அவர்களைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகை குஷ்பூ உள்ளிட்ட பலரும் மன்சூர் அலிகானுக்கு தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல், நெட்டிசன்கள், ரசிகர்களும் மன்சூர் அலிகானின் பேச்சை கண்டித்துள்ளனர். ஆனால் அவரோ தான் த்ரிஷாவை தவறாக பேசவில்லை என்பதாக விளக்கம் கொடுத்துள்ளார். இந்நிலையில், மன்சூர் அலிகானின் இந்த சர்ச்சை பேச்சை, மீம்ஸ் போட்டும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அதாவது இனிமேல், லோகேஷின் படங்களில் மன்சூர் அலிகான் நடிக்க வாய்ப்பே இல்லை என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

மங்காத்தா படத்தில் த்ரிஷாவின் அப்பா ஜெயபிரகாஷை அஜித் காரில் இருந்து தள்ளிவிடும் காட்சி ரொம்பவே பிரபலம். அதனை மீம்ஸாக கிரியேட் செய்துள்ள நெட்டிசன்கள், ஜெயபிரகாஷுக்குப் பதிலாக மன்சூர் அலிகானை அந்த கேரக்டரில் வைத்து ட்ரோல் செய்துள்ளனர். லியோ 2 உட்பட லோகேஷின் LCU படங்களில் இனி மன்சூர் அலிகானுக்கு வாய்ப்பே இல்லை என கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X