விழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு!

நடிகர் மன்சூர் அலிகான் விழா மேடையிலேயே உன் காதல் இருந்தால் பட நாயகியை மோசமாக கேலி செய்தார்.

Recommended Video

ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்- வீடியோ

சென்னை: உன் காதல் இருந்தால் பட விழாவில் கலந்துகொண்ட நடிகர் மன்சூர் அலிகான், விழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்தது, படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஸ்ரீகாந்த், சந்ரிகா ரவி, மக்பூல் சல்மான், ரியாஸ் கான் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'உன் காதல் இருந்தால்'. மரிகர் ஆர்ட்ஸ் சார்பில், ஹாசிம் மரிகர் இப்படத்தை தயாரித்து, இயக்கியிருக்கிறார்.

Mansoor alikhan teases actress Chandrika Ravi

சைக்காலஜிகள் திரில்லர் படமான இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் மன்சூர் அலிகான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

விழாவினை குணா என்பவர் தொகுத்து வழங்கினார். ஹீரோயின் சந்ரிகா ரவியை பேச அழைக்கும் போது, சூப்பர் பிகர் என அவரை வர்ணித்தார். இதைத்தொடர்ந்து மேடை ஏறிய நடிகர் ஸ்ரீகாந்த், சந்ரிகா ரவியை சூப்பர் பிகர் என தொகுப்பாளர் வர்ணித்ததற்கு வேதனை தெரிவித்தார். மேலும், பெண்களை விழிவாக பேச வேண்டாம் என்றும் அதற்காக தான் வருத்தம் தெரிவிப்பதாகவும் ஸ்ரீகாந்த் கூறினார். இதையடுத்து தொகுப்பாளரும் வருத்தம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேச வந்த மன்சூர் அலிகான், எடுத்த எடுப்பிலேயே தொகுப்பாளரோ, ஸ்ரீகாந்த்தோ வருத்தம் தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை என்றார். சினிமாகாரர்கள் எல்லாம் மாமன், மச்சான் போன்றவர்கள் என்றும், எனவே ஹீரோயினை சூப்பர் பிகர் என அழைத்ததில் தவறேதும் இல்லை என்றும் அவர் கூறினார்.

மேலும் "ஹீரோயின் சந்ரிகா பிராவையே ஜாக்கெட்டாக தைத்து போட்டுக்கொண்டு வந்துவிட்டார். அதனால் தான் அவரை பார்த்து சூப்பர் பிகர் என குணா கூறினார்", என மன்சூர் அலிகான் கேலி செய்தார். ஆனால் இதனை ஸ்ரீகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் யாரும் ரசிக்கவில்லை.

பிரதமர் மோடி, நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், சிவகார்த்திகேயன் என பலர் பற்றியும் மன்சூர் அலிகான் மேடையில் போட்டு தாக்கினார். இதனால் மேடையில் அமர்ந்திருந்த படக்குழுவினர், ஏதாவது பிரச்சினை வந்துவிடுமோ என்ற எண்ணத்தில், விழி பிதிங்கியபடியே இருந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X