»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சட்டசபைத் தேர்தலில் நான் நிற்க தடை விதித்தால் தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்த விட மாட்டேன் என்று நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.

வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் சினிமாவில் பிரபலமாகத் தொடங்கியதும் அரசியலில் குதித்தார்.

முதலில் பாட்டாளி மக்கள் கட்சியில் சேர்ந்த அவர் அக்கட்சியில் தனக்கு மரியாதை தரவில்லையென்று கூறி அதிலிருந்து விலகினார். அதிமுகவுக்குப்போய் திரும்பி வந்தார்.

தனிக்கட்சி:

பின்னர் தமிழ் பேரரசு என்று தனிக்கட்சி துவக்கினார் மன்சூர் அலிகான். அதுவும் போரடித்து விட்டதால் புதிய தமிழகம் கட்சியில் சேர்ந்தார். கடந்தநாடாளுமன்றத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு படு தோல்வியடைந்தார்.

ஆனால் அவர் தேர்தல் செலவு குறித்து தேர்தல் ஆணையத்திடம் விவரம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து அவர் 3 ஆண்டுகள் தேர்தலில் நிற்கக் கூடாதுஎன்று தடை விதிக்கப்பட்டது என்று பத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளியானது.

ஜனநாயகமா இது?

பத்திரிக்கை செய்தி குறித்துத் தெரிந்து கொண்டதும் அவர் புதன்கிழமை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், நான் 3 ஆண்டுகள் தேர்தலில் நிற்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக பத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. நான் தேர்தலில் செய்த செலவுகள்குறித்தான கணக்கு, வழக்குகள் குறித்து தேர்தல் அதிகாரியிடம் முறைப்படி ஒப்படைத்து விட்டேன்.

நிஜத்தில் தேர்தலால் எனக்கு வரவும் இல்லை. செலவும் இல்லை. பிரச்சாரம் செய்தேன். மைக் பிடித்தேன். கூட்டம் கூடியது. பத்திரிக்கைகளுக்குப் பேட்டிகொடுத்தேன். இதுதான் எனது தேர்தல் செலவு.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் தேர்தலில் நிற்கத் தடை விதித்திருப்பது எந்த விதத்தில் நியாயம்? இது ஜனநாயகமா?

ஜெயலலிதாவை தேர்தலில் நிற்க விடாமல் சதி செய்பவர்கள் தான் என்னையும் படுகுழியில் தள்ளி ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள். அவர்களுக்கு நான்பொது வாழ்க்கையில் ஈடுபடுவதில் விருப்பமில்லை.

நான் தேர்தலில் நிற்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக, தேர்தல் அலுவலகத்திலிருந்து எனக்கு ஒரு கடிதமும் வரவில்லை. ஆனானப்பட்டஅமெரிக்காவிலேயே தேர்தல் முடிவுகள் இழுபறியில் உள்ளது. ஜனநாயகம் கேலிக்கூத்தாக உள்ளது.

சாமான்யனான எனக்கு நீதி மறுக்கப்பட்டால் அப்புறம் எந்தத் தொகுதியிலும் தேர்தல் நடக்காது என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் மன்சூர்அலிகான்.

Read more about: actor, cinema, election

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil