மந்த்ரா-சத்யராஜ் படத்துக்குத் தடை நீக்கம் சத்யராஜ், மந்த்ரா, அபிதா ஆகியோர் நடித்துள்ள சுயேச்சை எம்.எல்.ஏ படத்தைத் திரையிட விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத்தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.சென்னையச் சேர்ந்த ஸ்டான்லி ராஜன், இப்ராகிம், கோவிந்தராஜன், வரதராஜன் ஆகியோர் எல்.ஐ.சி. வீட்டு வசதி நிறுவனத்தில்வீடு கட்டுவதாக கூறி கடன் வாங்கினர். பின்னர் அந்தப் பணத்தை வைத்து சுயேச்சை எம்.எல்.ஏ. என்ற படத்தை தயாரித்தனர்.இதில் சத்யராஜ் ஹீரோவாக நடித்துள்ளார். மார்க்கெட் இல்லாத அபிதா, மந்த்ரா ஆகியோரை ஹீரோயின்களாகப் போட்டனர்.இது குறித்துத் தெரிய வந்ததும் எல்.ஐ.சி. வீட்டு வசதி நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. படத்துக்குத் தடைவிதித்து கொடுத்த கடன் பணத்தைத் திருப்பித் தருமாறு எல்.ஐ.சி. நிறுவனம் தனது மனுவில் கோரியிருந்தது.இதை விசாரித்த உயர்நீதிமன்றம், சுயேச்சை எம்.எல்.ஏ. படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது. பின்னர் இரு தரப்புவாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதி சொக்கலிங்கம் இவ்வழக்கில் இறுதித் தீர்ப்பைப் பிறப்பித்தார்.அதன்படி, எல்.ஐ.சி. வீட்டு வசதி நிறுவனம், கலர் லேப் ஆகியவை கொண்ட குழுவின் மேற்பார்வையில் படத்தை வெளியிடலாம்.அதன் மூலம் வசூலாகும் தொகையை வங்கியில் முதலீடு செய்ய வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.இதன் மூலம் விரைவில் சுயேச்சை எம்.எல்.ஏ. வெளியாகும் என்று தெரிகிறது.
சத்யராஜ், மந்த்ரா, அபிதா ஆகியோர் நடித்துள்ள சுயேச்சை எம்.எல்.ஏ படத்தைத் திரையிட விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத்தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.
சென்னையச் சேர்ந்த ஸ்டான்லி ராஜன், இப்ராகிம், கோவிந்தராஜன், வரதராஜன் ஆகியோர் எல்.ஐ.சி. வீட்டு வசதி நிறுவனத்தில்வீடு கட்டுவதாக கூறி கடன் வாங்கினர். பின்னர் அந்தப் பணத்தை வைத்து சுயேச்சை எம்.எல்.ஏ. என்ற படத்தை தயாரித்தனர்.
இதில் சத்யராஜ் ஹீரோவாக நடித்துள்ளார். மார்க்கெட் இல்லாத அபிதா, மந்த்ரா ஆகியோரை ஹீரோயின்களாகப் போட்டனர்.
இது குறித்துத் தெரிய வந்ததும் எல்.ஐ.சி. வீட்டு வசதி நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. படத்துக்குத் தடைவிதித்து கொடுத்த கடன் பணத்தைத் திருப்பித் தருமாறு எல்.ஐ.சி. நிறுவனம் தனது மனுவில் கோரியிருந்தது.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம், சுயேச்சை எம்.எல்.ஏ. படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது. பின்னர் இரு தரப்புவாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதி சொக்கலிங்கம் இவ்வழக்கில் இறுதித் தீர்ப்பைப் பிறப்பித்தார்.
அதன்படி, எல்.ஐ.சி. வீட்டு வசதி நிறுவனம், கலர் லேப் ஆகியவை கொண்ட குழுவின் மேற்பார்வையில் படத்தை வெளியிடலாம்.அதன் மூலம் வசூலாகும் தொகையை வங்கியில் முதலீடு செய்ய வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
இதன் மூலம் விரைவில் சுயேச்சை எம்.எல்.ஏ. வெளியாகும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications