மனுசனா நீ... இயக்குநருக்கு டாக்டர்கள் மிரட்டலாம்!
Recommended Video

கஸாலி இயக்கத்தில் ஹெச்-3 சினிமாஸ் தயாரிப்பில் நேற்று வெளியாகியுள்ள 'மனுசனா நீ' திரைப்படம் டாக்டர்களை கேவலமாக சித்தரித்துள்ளதாகக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
'மனுசனா நீ' படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான கஸாலி இதுபற்றி கூறுகையில், "சமீபகாலமாக திரைப்படங்களுக்கு சிலர் வேண்டுமென்றே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மெர்சல், பத்மாவதி என நீள்கிறது பட்டியல். அந்த வகையில் 'மனுசனா நீ படத்தில் டாக்டர்களை கேவலப்படுத்தியுள்ளார்கள், எனவே படத்தை வெளியிடக்கூடாது' என்று சில டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனராம். இது சம்பந்தமாக எனக்கு மிரட்டலும் வந்திருக்கிறது.

எல்லா துறையிலும் பணத்தாசை பிடித்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நீதி, நியாயம் எல்லாம் மறந்து கேவலமாக நடந்து கொள்கிறார்கள். அவர்களைப் பற்றிய உண்மையை சொன்னால் ஒட்டு மொத்தமாக அந்த துறை சார்ந்தவர்களை கேவலமாக சித்தரிப்பதாக அர்த்தமல்ல.
இந்த மிரட்டலுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். படத்தை தியேட்டரில் பாருங்கள். அதன் பிறகு உங்கள் கருத்துகளை சொல்லுங்கள். இனிமேலும் மிரட்டல் தொடர்ந்தால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி யோசித்து களத்தில் குதிப்பேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











