உலகத் திரைப்பட விழாக்களில் பாராட்டினை பெற்ற திரைப்படம் 'மனுசங்கடா'..!
பல உலகத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பெரும் பாராட்டினை பெற்ற திரைப்படம் 'மனுசங்கடா'.
சென்னை: உலகத் திரைப்பட விழாக்களில் பாராட்டினை பெற்ற 'மனுசங்கடா' திரைப்படம் அக்டோபர் 12ம் தேதி ரிலீசாகிறது.
பல உலகத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பெரும் பாராட்டினை பெற்ற திரைப்படம் ஏ.கே.பிலிம்ஸ் தயாரித்துள்ள 'மனுசங்கடா'. இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் தேசிய விருது பெற்ற இயக்குநர் அம்ஷன் குமார்.

மத்திய அரசால் கோவாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் உலகத் திரைப்பட விழாவில் சென்ற ஆண்டு திரையிடப்பட்ட ஒரே தமிழ்ப் படம் இது. புகழ் பெற்ற கெய்ரோ உலகத் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.
ராஜீவ் ஆனந்த், சசிகுமார், மணிமேகலை,ஷீலா, விதுர், ஆனந்த் சம்பத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பி.எஸ்.தரன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அரவிந்த் - சங்கர் இசையமைத்துள்ளனர்.

'பரியேறும் பெருமாள்' படத்தை போன்றே பல பரபரப்பான உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தீண்டாமைக் கொடுமைகள் பற்றி எடுக்கப்பட்ட இப்படம் வரும் அக்டோபர் 12-ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது.


Click it and Unblock the Notifications











