ஆடை களைப்பு.. நிர்வாண குளியல்.. லிப்லாக்.. சர்ச்சை இயக்குநரின் 'க்ளைமேக்ஸ்ல' ஏகப்பட்டது இருக்கு!
சென்னை: இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் க்ளைமேக்ஸ் படத்தின் டீசரில் அடல்ட் காட்சிகள் பல இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா. தெலுங்கு மட்டுமின்றி இந்தியிலும் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தனது க்ளைமேக்ஸ் படத்தின் டீசரை வெளியிட்டார் ராம் கோபால் வர்மா. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஃபேவரைட் நடிகை
அமெரிக்காவை சேர்ந்த கவர்ச்சி நடிகையான மியா மல்கோவாவை வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் ராம் கோபால் வர்மா. மியா மல்கோவா, ராம்கோபால் வர்மாவின் ஃபேவரைட்டான நடிகை ஆவார். இதனை ராம் கோபால் வர்மாவே பலமுறை கூறியிருக்கிறார்.

நிர்வாண நடிப்பு
மியா மல்கோவா 2018ஆம் ஆண்டு ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் காட் செக்ஸ் ட்ரூத் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் பல நிர்வாண காட்சிகளில் அசால்ட்டாக நடித்திருந்தார் மியா மல்கோவா. இதானல் அந்தப்படம் சர்சையிலும் சிக்கியது.

அடல்ட் காட்சிகள்
இந்நிலையில் இந்தப் படத்திலும் அதேபோன்று பட்டைய கிளப்பியிருக்கிறார் மியா மல்கோவா என்பது படத்தின் டீசரை பார்த்தாலே தெரிகிறது. படத்தில் ஆடை களைப்பு, நிர்வாண காட்சிகள், லிப்லாக் சீன்கள் என அடல்ட் காட்சிகள் ஏராளமாக இடம்பெற்றுள்ளது.

உள்ளே வராதீர்கள்..
க்ளைமேக்ஸ் படம் பாலைவனத்தில் செட் செய்யப்பட்ட ஒரு அச்சமூட்டும் ஆக்ஷன் படம் என்பது அதன் டீசரிலேயே தெரிகிறது. டீசரில் முழுக்க முழுக்க செம ஹாட்டாக தென்படுகிறார் மியா மல்கோவா. உள்ளே வராதீர்கள் என்று எச்சரிக்கப்பட்ட ஏரியாவுக்குள் ஒரு இளம் ஜோடி நுழைகிறது.

லிப் லாக்
அவர்களை பாலைவனத்தில் முகமூடி அணிந்த ஒரு கூட்டம் அவர்களை விரட்டுவதாக உள்ளது டீசர். மேலும் பாலைவனத்தில் உள்ள ஒரு குளத்தில் நிர்வாணமாக குளிக்கும் மியா, தனது காதலருக்கு லிப் லாக் கொடுப்பதும், உள்ளாடைகளையும் ஒவ்வொன்றாய் கழட்டுவதுமாய் முடிகிறது டீசர்.

பலான காட்சிகள்
நேற்று முன்தினம் வெளியான இந்த டீசரை இதுவரை 35 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்டு களித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெயிலர் விரைவில் ரிலீஸ் ஆகும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலான காட்சிகள் பல இருந்தாலும் இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.


Click it and Unblock the Notifications











