’சைரன்’ பட இயக்குநருக்கு ஜோராக நடந்த திருமணம்.. ஜெயம் ரவி மட்டுமில்லை இத்தனை பிரபலங்கள் பங்கேற்பு!

சென்னை: ஜெயம் ரவி நடிப்பில் இந்த ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி வெளியான 'சைரன் 108' படத்தை இயக்கிய அந்தோணி பாக்யராஜ் திருமணம் நடைபெற்றது. அவரது திருமணத்தில் ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் பங்கேற்ற புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

முதல் படத்தை இயக்கிவிட்டுத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்கிற முடிவோடு இருந்த அந்தோணி பாக்யராஜ் சைரன் படத்தை முடித்த நிலையில், தனது திருமணத்தை நடத்தி முடித்துள்ளார்.

Many Celebrities attends Siren Movie Director Anthony Bhagyaraj marriage reception

திருமணம் எளிமையான முறையில் நடைபெற்ற நிலையில், அன்று மாலை நடைபெற்ற திருமண வரவேற்பு புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை நேரில் வாழ்த்தியுள்ளனர்.

சைரன் 108: ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, அனுபமா பரமேஸ்வரன் நடித்த சைரன் 108 திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி வெளியானது. சைரன் திரைப்படத்தின் கதை வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தாலும் மேக்கிங் மற்றும் எடிட்டிங்கில் நடந்த சொதப்பல் காரணமாக படம் பெரிதாக ஓடவில்லை. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான அந்த படத்திற்கு ஓடிடி ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து பார்த்தனர். ஜெயம் ரவியின் மாமியார் தான் இந்த படத்தை தயாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Many Celebrities attends Siren Movie Director Anthony Bhagyaraj marriage reception

அந்தோணி பாக்கியராஜ் திருமணம்: ஜெயம் ரவியை வைத்து சைரன் படத்தை இயக்கிய அந்தோணி பாக்கியராஜ் கடந்த மே 19ம் தேதி ரம்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரது திருமணத்தில் ஜெயம் ரவி, சமுத்திரகனி, சிறுத்தை சிவா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

Many Celebrities attends Siren Movie Director Anthony Bhagyaraj marriage reception

குடும்பத்துடன் ஜெயம் ரவி: பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்ட பலருக்கு முதல் பட வாய்ப்பை கொடுத்து அழகு பார்த்த ஜெயம் ரவி கடைசியாக அந்தோணி பாக்கியராஜுக்கும் முதல் படத்தைக் கொடுத்து அழகு பார்த்த நிலையில், சைரன் பட இயக்குநரின் திருமணத்தில் தனது மனைவி ஆர்த்தி ரவி, அப்பா, அம்மா, மகன் என ஒட்டுமொத்த குடும்பத்துடன் வந்து மணமக்களை வாழ்த்தினார்.

Many Celebrities attends Siren Movie Director Anthony Bhagyaraj marriage reception

சமுத்திரகனி முதல் சிறுத்தை சிவா வரை: ஜெயம் ரவியை தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இயக்குநர் சிறுத்தை சிவா பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். நடிகர் சதீஷ், சைரன் படத்தில் வில்லனாக நடித்த சமுத்திரகனி, அழகம்பெருமாள் உள்ளிட்ட நடிகர்கள் என பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. அந்தோணி பாக்கியராஜுக்கு இன்னொரு பட வாய்ப்பையும் ஜெயம் ரவி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Many Celebrities attends Siren Movie Director Anthony Bhagyaraj marriage reception

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X