வேற லெவலில் விஜய் பிறந்த நாள்.. ரகம் ரகமாக ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்ஸ்.. ரணகளமாகும் டிவிட்டர்!
சென்னை: நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் ரகம் ரகமான ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட்டாகி வருகின்றன.
Recommended Video
தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். தமிழகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார்.

இந்நிலையில் நடிகர் விஜய் தனது 46வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களை ரணகளப் படுத்தி வருகின்றனர்.
#HBDTHALPATHYVijay, #MasterTrailer, Thalaiva ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகிறது. விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு நள்ளிரவில் மாஸ்டர் படத்தின் போஸ்டர் வெளியானது.

இதனால் மாஸ்டர் ஹேஷ்டேக் ட்ரெண்டானது. இந்நிலையில் மாஸ்டர் ட்ரெயிலருக்காக மரண வெயிட்டிங் என மாஸ்டர் ட்ரெயிலர் என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
விஜய் பிறந்தநாளில் ரகம் ரகமாக ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்குகளால் சமூக வலைதளங்கள் திக்குமுக்காடி வருகின்றன. விஜய் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராக உள்ள மாஸ்டர் திரைப்படம் லாக்டவுனால் தள்ளி போகிறது.
இந்நிலையில் மாஸ்டர் குறித்த அப்டேட் வேண்டும் என்றும் இந்த ஹேஷ்டேக்குகள் மூலம் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications