லேடி சூப்பர் ஸ்டாருக்கு இன்று பிறந்தநாள்.. பல ஹேஷ்டேக்குகளால் டிவிட்டரை திணறடிக்கும் ஃபேன்ஸ்!

Recommended Video

Lady Superstar Nayanthara 35th suprise Birthday Celebration

சென்னை: நடிகை நயன்தாரா இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

மலையாள தேசத்தை சேர்ந்தவரான நடிகை நயன்தாரா தமிழில் சரத்குமாருடன் ஐயா படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்டுவிட்டார் நயன்தாரா.

ரஜினி, விஜய், அஜித், சூர்யா, ஆர்யா, ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, தனுஷ், சிம்பு என பலருடனும் நடித்துவிட்டார். நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து வருகிறார்.

நியூயார்க்கில் கொண்டாட்டம்

நியூயார்க்கில் கொண்டாட்டம்

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தனது காதலரான விக்னேஷ் சிவனுடன் நியூயார்க்கில் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் நயன்தாரா.

விதவிதமான ஹேஷ்டேக்குகள்

விதவிதமான ஹேஷ்டேக்குகள்

நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு திரைத்துறையினரும் ரசிகர்களும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு டிவிட்டரில் விதவிதமான ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட்டாகி வருகின்றன.

ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட்ஸ்

ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட்ஸ்

#HBDLadySuperStarNayanthara, #HBDNayanthara, #HappyBirthdayNayanthara உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட்டாகி வருகின்றன. இந்த ஹேஷ்டேக்குகள் சென்னை ட்ரென்டிங்கில் டாப்பில் உள்ளன.

திறமையான நடிகை

அழகான திறமையான நடிகை நயன்தாராவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

அழகான நடிகைகளில் ஒருவர்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.. அற்புதமான ஆண்டாக அமையட்டும்.. திறமையான மற்றும் அழகான நடிகைகளில் ஒருவர் நீங்கள் என தெரிவித்திருக்கிறார் இந்த ரசிகர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X