For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அட்ஜஸ்ட் பண்ணிக்க... ஹீரோயின்களை பாதிக்கும் காஸ்டிங் கவுச் பிரச்சனை - ஜரீன் கான்

|

மும்பை: பல ஹீரோயின்கள் காஸ்டிங் கவுச் போன்ற பிரச்சனைகளை சந்தித்து தான் வருகிறார்கள். இதை எதிர்க்க வேண்டும் என்றால் ஆண்களுக்கு பெண்கள் மீது உள்ள பார்வை மாறவேண்டும். சமூகம் தான் பெண்களுக்கு வேலியாக இருந்து பாதுகாக்க வேண்டும் என்று நடிகை ஜரீன் கான் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பல்வேறு மொழி திரையுலகை சேர்ந்த பல நடிகர், நடிகைகள் காஸ்டிங் கவுச் குறித்து தாங்கள் கடந்து வந்த சம்பவங்கள் மற்றும் அதற்கு அவர்கள் எப்படி ரியாக்ட் செய்தனர் என்பது குறித்தும் வெளிப்படையாக கூறி இருக்கிறார்கள்.

Many heroines facing casting couch problems - Zareen Khan

2014ம் ஆண்டு ஜாட் ஜேம்ஸ் பாண்ட் எனும் பஞ்சாபி திரைப்படம் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர் ஜரீன் கான். சல்மான் கானோடு இணைந்து நடித்த வீர் திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். ஹவுஸ்ஃபுல் 2, ஹேட் ஸ்டோரி 3 மற்றும் அக்சர் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது ஜரீன் கான் நடிப்பில் டாக்கா எனும் பஞ்சாபி திரைப்படம் வெளியாவதற்கு தயாராகவுள்ளது.

32 வயதான ஜரீன் கான் அண்மையில் அளித்த ஒரு பேட்டியில் தான் திரைத்துறையில் நடிக்க வந்த ஆரம்ப காலத்திலேயே இரண்டு முறை காஸ்டிங் கவுச் பிரச்னையை அனுபவித்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

அவருக்கு நிகழ்ந்த கொடூரமான சம்பவத்தை பற்றி விவரிக்கையில், இயக்குனர் ஒருவர் தன்னுடன் முத்த காட்சி ஒன்றை ஒத்திகை பார்க்க சொல்லி கேட்டுக்கொண்டார். சினிமா துறைக்கு புதியவர் என்பதால் தடைகளை விட்டு விட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். நான் முத்த காட்சியை ஒத்திகையாக செய்யவில்லை என்று மறுத்துள்ளார்.

Many heroines facing casting couch problems - Zareen Khan

ஹேட் ஸ்டோரி 2 படப்பிடிப்பில் நடைபெற்ற மற்றுமொரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார். ஒருவர் தன்னை நண்பரை விடவும் அதிகமாக பழக்கமுடியுமா என்று கேட்டார். ஆம் என்றால் அதிகமான பட வாய்ப்புகள் பெற்று தருவதாக கூறியுள்ளார்.

ஜரீன் கான் மட்டுமின்றி ராதிகா ஆப்தே, கல்கி கோச்லின், வித்யா பாலன், அதிதி ராவ் போன்றவர்களும் தங்களுக்கு நேர்ந்த வேதனைகள் பற்றி ஏற்கனவே பகிர்ந்துள்ளார். ஒரு காலகட்டத்தில் வாழ்க்கையான இந்த தொழிலில் எப்படி புத்திசாலித்தனமாக எதிர்கொள்வது என்பதை கற்று கொண்டதாக தெரிவித்துள்ளார் ஜரீன் கான்.

அதே போல் வித்யா பாலன் தனக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தை பற்றி விவரித்துள்ளார். ஒரு நாள் சென்னையில் அவரை சந்திக்க ஒரு இயக்குநர் வந்துள்ளார். இவர்கள் இருவரும் காபி ஷாப்பில் உட்கார்ந்து பேசுவோம் என்றுள்ளார். ஆனால் அந்த இயக்குநரோ தன்னை அறைக்கு சென்று பேசலாம் என்று வலியுறுத்தியுள்ளார்.

பின்னர் அவரை தொடர்ந்த வித்யா பாலன் அறையின் கதவை திறந்து வைத்துள்ளார். அதனை கண்ட அந்த இயக்குனர் ஐந்தே நிமிடத்தில் வெளியில் சென்றுள்ளார். காஸ்டிங் கவுச் பற்றி பேசும் போது இந்த சம்பவம் என்னை தாக்கியது என்றார் வித்யா பாலன்.

Many heroines facing casting couch problems - Zareen Khan

காஸ்டிங் கவுச் பிரச்சனை காரணத்தால் பல மாதங்கள் வேலை இன்றி இருந்ததாகவும் அதிதி ராவ் சமீபத்தில் கூறியிருந்தார். நான் என் வேலையை இழந்தேன், நிறைய அழுதிருக்கிறேன். அதற்காக நான் கவலைப்பட வில்லை. ஆனால், மிகுந்த மனவருத்தம் இருந்தது. ஏன் இப்படி பெண்களை மோசமாக ட்ரீட் செய்கிறார்கள் என்பதே என் வருத்தம். காஸ்டிங் கவுச் பிரச்சனை காரணத்தால் மட்டும் எட்டு மாதங்கள் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தேன். ஆனால், அந்த இக்கட்டான சூழல் தான் என்னை ஒரு தைரியமான பெண்ணாக மாற்றியது. நான் என்ன வேலை செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க அது உதவியது என்று கூறியுள்ளார்.

பல ஹீரோயின்கள் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்து தான் வருகிறார்கள். இதை எதிர்க்க வேண்டும் என்றால் ஆண்களுக்கு பெண்கள் மீது உள்ள பார்வை மாறவேண்டும். சமூகம் தான் பெண்களுக்கு வேலியாக இருந்து பாதுகாக்க வேண்டும்.

English summary
Many heroines have problems like casting couch. To oppose this, men have to change their outlook on women. Actress Zareen Khan said the community should protect women from being busy.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more