பிக்பாஸ் வீட்டுல நிறைய பேர் என்னை விரும்பினாங்க.. பீதியை கிளப்பும் மீரா மிதுன்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மீரா மிதுன், தன்னை பிக்பாஸ் வீட்டில் பலர் விரும்பியதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது சேரன் விஷயத்தில் பல சர்ச்சைகளை கிளப்பினார். தொடர்ந்து தர்ஷன் மீது இன்ட்ரஸ்ட் இருப்பதாக கூறிய மீரா மிதுன் தனது தாயாரிடம் வந்து பேசுமாறு கூறினார்.
ஆனால் அதற்கு ஒப்புக்கொள்ளாத தர்ஷன், தனக்கு வெளியே காதலி இருப்பதாக கூறினார். இதைத்தொடர்ந்து முகெனிடம் நெருக்கம் காட்டினார் மீரா மிதுன்.
முகென் வீடியோ
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிய போது நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியேறிய ஹவுஸ்மேட்ஸ்களை வீட்டிற்கு அழைத்து வந்தார் பிக்பாஸ். பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் முன்னதாக முகெனும் தானும் ஒன்றாக இருக்கும் வீடியோக்களை வைரலாக்க வேண்டும் என தனது நண்பருக்கு ஆர்டர் போட்டார் மீரா.
அபிராமிக்கும் தொடர்பு
இந்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுதொடர்பாக வீடியோக்களை வெளியிட்டுள்ள மீதுன், சாக்ஷி, அபிராமி மீது குற்றச்சாட்டுக்களை அள்ளிவிட்டுள்ளார். ஆடியோ ரிலீஸானதற்கும் அபிராமிக்கும் தொடர்புள்ளது என்றும் கூறியிருக்கிறார் மீரா.

சரியாக படவில்லை
மேலும் தர்ஷனை என் அம்மாவிடம் போய் பேசு என டிவி சேனலில் தைரியமாக சொன்ன ஆள் நான், அந்தளவுக்கு போல்டானவள். என்னுடைய பர்சனல் லைப்பில் சிலர் விளையாடுவது எனக்கு சரியாக படவில்லை. முகெனை வைத்து புகழ் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை.

இப்போதான் தெரிகிறது
மலேசியாவில் வேண்டுமானால் முகெனை தெரிந்திருக்கலாம். தமிழகத்தில் அவரை யாருக்கும் தெரியாது. மக்களுக்கு இந்த ஒரு வருஷமாதான் என்னை தெரியும். ஒரு நெகட்டிவ் விஷயத்தால்தான் மக்களுக்கு என்னை தெரிந்துள்ளது. நான் மிஸ் சவுத் இந்தியா என்பது எத்தனை பேருக்கு தெரியும் என எனக்கு தெரியவில்லை. மிஸ் சவுத் இந்தியா பட்டம் பறிக்கப்பட்டதாக ரூமர் வெளியான பிறகுதான் என்னை பலருக்கு தெரிந்தது.
பலர் விரும்பினார்கள்
பிக்பாஸ் வீட்டில் என்னை பலர் விரும்பினார்கள். அவர்கள் யார் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்கு ஓபனா சொல்ல தைரியம் இல்லை. நிறைய பேர் இந்த மாதிரி என்கிட்ட புரபோஸ் பண்ண லிஸ்ட்ல இருக்காங்க. இதைபற்றியெல்லாம் பேசினால் முகெனின் ஓட்டு பாதிக்கப்படும் என்பதால்தான் நான் அமைதியாக இருந்தேன்.

இன்ட்ரஸ்ட் இல்லை
இதேமாதிரி இனிமே மத்தவங்க தேவையில்லாம பேசுறத நான் அனுமதிக்க மாட்டேன். முகென் பெயரை கெடுக்க வேண்டும் என்பது எனது நோக்கமில்லை. எனக்கு அவர் மீது இன்ட்ரஸ்டும் இல்லை. அவருக்கு என் மேல இன்ட்ரஸ்ட் இருக்கலாம், ஆனால் எனக்கு யார்மேலேயும் இன்ட்ரஸ்ட் இல்லை. என்னுடைய ஃபோகஸ் முழுக்க என் கேரியரை பற்றிதான் உள்ளது என தனது தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறி பல வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார் மீரா மிதுன்.

தற்போது பிக்பாஸ்
கடந்த சில நாட்களாக தமிழ் சினிமாவையும் தமிழ் சினிமாக்காரர்களையும் தாக்கி வீடியோவும் டிவிட்டுகளும் போட்டு வந்த மீரா, தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் குறித்து வீடியோக்களை வெளியிட்டு பீதியை கிளப்பி வருகிறார்.


Click it and Unblock the Notifications











