என் படத்தின் காட்சிகளை பல இயக்குனர்கள் காப்பி அடித்தார்கள்... யாரை சொல்கிறார் மகிழ் திருமேனி?

சென்னை : தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராக உள்ளார் இயக்குனர் மகிழ் திருமேனி

தனது ஒவ்வொரு படங்களிலும் ரசிகர்களை பிரமிக்க வைத்து வரும் இவர் கடைசியாக அருண் விஜய் நடிப்பில் வெளியாகி பட்டையை கிளப்பிய தடம் என்ற படத்தை இயக்கினார்

இப்பொழுது உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால் இணைந்து நடித்து வரும் புதிய திரில்லர் படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் இயக்குனர் மகிழ் திருமேனி தன்னுடைய படத்தில் இருந்து பல காட்சிகளை பல இயக்குனர்கள் அப்பட்டமாக காப்பி அடித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

 தடையற தாக்க

தடையற தாக்க

வித்தியாசமான இயக்கம் கனத்த குரல் என தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராக வலம் வந்து கொண்டுள்ளன இயக்குனர் மகிழ்திருமேனி முன்தினம் பார்த்தேனே என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். ஒவ்வொரு படங்களிலும் பார்க்கும் ரசிகர்கள் அனைவரையும் யோசிக்க வைக்கும் வகையில் கதைகளை இயக்கி வருகிறார். அந்த வகையில் முதல் படமாக வெளியான முந்தினம் பார்த்தேனே ரசிகர்களால் அந்த அளவுக்கு கவனிக்கப்படவில்லை. அதைத் தொடர்ந்து இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியான தடையற தாக்க பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.

மீகாமன்

மீகாமன்

அருண் விஜய் ஹீரோவாக நடித்த தடையற தாக்க படத்தில் ரகுல் பிரீத் சிங் கதாநாயகியாக நடித்து இருப்பார். அதிரடி ஆக்ஷன் திரில்லர் கலந்த திரைப்படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து ஆர்யா நடிப்பில் வெளியான மீகாமன் படத்தை இயக்கினார். இந்தப்படம் மிகச்சிறந்த திரில்லர் கதை களத்தில் வெளியானாலும் ரசிகர்களால் சரியாக கவனிக்கவில்லை. முற்றிலும் வித்தியாசமான கேங்ஸ்டர் கதை களத்தில் வெளியான இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடித்திருப்பார்.

 அப்படியே காப்பி அடித்து

அப்படியே காப்பி அடித்து

மீகாமன் படத்தில் ஒவ்வொரு காட்சிகளும் மிக வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கும். இதுவரை தமிழ் ரசிகர்கள் பார்க்காத வகையில் முற்றிலுமாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்க இந்த படத்தில் இடம்பெற்ற பல காட்சிகளை பல இயக்குனர்கள் அப்படியே காப்பி அடித்து தங்களது படங்களில் பயன்படுத்தி விட்டார்கள்.

 பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை

பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை

மீகாமன் படத்தில் இடம்பெற்ற பல காட்சிகளை காப்பியடித்து பட்டி டிங்கரிங் பார்த்து பயன்படுத்தி விட்டார்கள். அந்தக் காட்சிகளை பார்க்கும்போதே உங்களுக்கே அப்பட்டமாக புரிந்துவிடும் . இருப்பினும் அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என இயக்குனர் மகிழ் திருமேனி நேர் காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். ஆனால் யார் யார் அந்த இயக்குனர்கள் என்பது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. டெடி, யாதும் ஊரே யாவரும் கேளிர் உள்ளிட்ட சில படங்களில் மகிழ் திருமேனி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X