விஜய்சேதுபதி கூட நடிச்ச சீன்ஸ் எல்லாம் வெட்டிட்டாங்க - மைனா நந்தினி சொன்ன தகவல்
சென்னை: விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி உடன் தான் ஜோடியாக நடித்த பல காட்சிகள் வெட்டப்பட்டு விட்டதாக மைனா நந்தினி தெரிவித்திருக்கிறார்.
அத்திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மூன்று மனைவிகளில் ஒருவராக மைனா நந்தினி நடித்திருந்தார்.
நந்தினியுடன், ஷிவானி, விஜே மகேஸ்வரி ஆகிய இருவரும் நடித்திருந்தனர்.

வெட்டி எடுத்த சீன்ஸ்
பேட்டி ஒன்றில் இது குறித்து மைனா நந்தினி வெளியிட்டிருக்கும் தகவலில், ஒரு சீன்ல நாங்க மூன்று பேரும் விஜய் சேதுபதி கூட இருப்போம். அப்போ நான் இவங்களுக்கு முப்பத்தஞ்சாயிரம், இவங்களுக்கு நாற்பதாயிரம் அப்படின்னு கணக்கு சொல்லிட்டு இருப்பேன். ஷிவானி அங்க வருவா.. காபி கொண்டு வந்து கொடுப்பா. அவளுக்கு 10 லட்சம் அப்படின்னு சொல்லுவேன். அந்த சீன வெட்டிட்டாங்க. அதே மாதிரி, போட்ல நிறைய சீன் இருந்தது. மீன் வறுத்துக் கொடுக்குற மாதிரி சீன் வச்சிருந்தாங்க. அதெல்லாம் வெட்டிட்டாங்க எனத் தெரிவித்தார்.

படத்தில் கதைக்காக மட்டும்
விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு 3 மனைவிகள் என்பதை கதையோட்டத்தில் சொல்வார்கள். ஒரு காட்சியில் மட்டுமே இவர்கள் மூவரும் வருவார்கள். ஆனால் விஜய் சேதுபதியின் மனைவிகள், அவர்களைச் சுற்றிய வாழ்க்கையை காட்டியிருந்தால் நிச்சயம் திரைக்கதையின் வேகத்தில் தொய்வு ஏற்பட்டிருக்கலாம். அந்த வகையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சாமர்த்தியமாக அதனை எடிட்டிங்கில் சரி செய்து தேவையான விசயங்களை மட்டுமே காட்டியிருப்பதால் தான் விக்ரம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்திருக்கிறது.

மதுரைப் பொண்ணு நந்தினி
மைனா நந்தினி மதுரையைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் சின்னத்திரையில் நடிக்க வந்த போது, கிராமத்து சாயலில், வட்டார மொழியில், மிக எதார்த்தமான பேச்சில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ஆனால் கால மாற்றத்தில் அவர் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படவே, பல முயற்சிகளுக்குப் பிறகு தனது ஸ்கின் முதல் உடல் வாகு வரை அத்தனை நாகரீகமாக மாற்றிக் கொண்டார். மைனா நந்தினியா இது? என ஆச்சரியப்படும் படியாக அவரது தோற்றத்தில் அத்தனை மாற்றங்களைக் காட்டினார். அதன் பின்னர் காதல் பிரச்சினை, காதலர் தற்கொலை என சில காலம் சத்தமின்றி இருந்தார். தற்போது நடன இயக்குநர் ஒருவரைத் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார்.

ஷிவானி ரசிகர்களுக்கு ஏமாற்றம்
சின்னத்திரை சீரியல்கள் மூலம் குடும்பப் பாங்கான தோற்றத்தில் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். ஆனால் இன்ஸ்டாவில் அவர் காட்டிய கிளாமர் அவதாரத்தில் அசந்து போனார்கள் ரசிகர்கள். அதன் பின்னர் வெரைட்டி வெரைட்டியாக கிளாமர் போட்டோஸ்களை ஷிவானி போட, சொக்கிப் போனார்கள் இன்ஸ்டாவாசிகள். அறுவெறுப்பில்லாத ரசிக்க வைக்கும் கிளாமர் தான் ஷிவானியின் ஸ்டைல். அந்த வகையில், ஷிவானி விக்ரம் திரைப்படத்தில் நடிக்கிறார் என அறிந்தவுடன் அவரது ரசிகர் பட்டாளம் குஷி ஆகி போனது. ஆனால் படத்தில் ஒரு சில பிரேம்களில் மட்டுமே ஷிவானி வருவதால் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். என்றாலும், ஷிவானி வரும் அந்த ஒரு சீனையும் கொண்டாடும் ரசிகர்களும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











