அருண் விஜய்யா வேண்டவே வேண்டாம்ன்னு நிறைய பேர் சொன்னாங்க.. இயக்குநர் ஏ வெங்கடேஷ் சொன்ன தகவல்!
சென்னை: நடிகர் அருண் விஜய் தனது கடுமையான முயற்சியின் மூலம் இப்போது தமிழில் ஆக்சன் ஹீரோவாக பட்டையை கிளப்பிக் கொண்டு உள்ளார்
அருண் விஜய் நடிப்பில் வெளியான ஒவ்வொரு படங்களும் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது
இந்நிலையில் இயக்குநர் ஏ வெங்கடேஷ் இடம் அருண் விஜய்யை ஹீரோவாக போட வேண்டாம் என்று நிறைய பேர் சொன்னதாக தனியார் யூட்யூப் சேனல் நேர்காணலில் பகிர்ந்துள்ளார்

தோல்விகளால் துவண்ட அருண் விஜய்
மிகப் பெரிய திரை குடும்பத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்து இருந்தாலும் சரியான படங்களும் சரியான கதைகளும் அமையாததால் நிலையான வெற்றிக்காக தடுமாறிக் கொண்டிருந்த அருண் விஜய் இப்போது தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த ஆக்ஷன் நாயகனாக வலம் வந்து கொண்டுள்ளார். ஹீரோவாக நடித்த திரைப்படங்கள் தொடர் தோல்விகளை கண்டு வந்த நிலையில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் வில்லனாக நடித்த அருண் விஜய்க்கு அதன்பிறகு தொட்டதெல்லாம் வெற்றி போல அடுத்தடுத்து வெளியான திரைப்படங்கள் வெற்றி பெற்று வருகிறது. மேலும் அருண் விஜய் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகளும் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியாவதால் ரசிகர்களும் மிகப்பெரிய ஆதரவு கொடுத்து வருகின்றனர். திரில்லர் மற்றும் ஆக்சன் கதைகளில் நடித்து இப்போது ஆக்ஷன் நாயகனாக வலம் வந்து கொண்டுள்ளார்.

ஆக்சன் ஹீரோவாக
விஜய்யை பகவதி படத்தின் மூலம் ஆக்சன் ஹீரோவாக மாற்றிய ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் அருண் விஜய் நடித்த திரைப்படம் மலை மலை மற்றும் மாஞ்சா வேலு. பக்காவான கமர்சியல் படங்களுக்கு மிகவும் பெயர் போன இயக்குநர் வெங்கடேஷ் தனியார் யூட்யூப் சேனல் நேர்காணலில் அருண் விஜய்யை ஹீரோவாக போட வேண்டாம் என பலர் கூறியதாக பகிர்ந்துள்ளார்.

வெங்கடேஷ் இயக்கத்தில்
மேலும் அவர் கூறியதாவது அர்ஜுன் நடிப்பில் வெளியான வாத்தியார் படத்தை இயக்கி கொண்டிருந்த சமயத்தில் அர்ஜுன் இயக்கத்தில் அருண் விஜய் தவம் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் அப்போது வேலை விஷயமாக அடிக்கடி அர்ஜுன் அலுவலகத்திற்கு வந்து செல்வதை கவனித்த வெங்கடேஷ் இவர் பார்க்க நன்றாக இருக்கிறாரே என தன்னுடைய அடுத்த படத்தை அருண் விஜய்யை வைத்து இயக்க இருந்தாராம்.அப்பொழுது அதைக் கேள்விப்பட்ட சுற்றி இருந்தவர்கள் அனைவரும் அருண் விஜய்யை ஹீரோவாக போட வேண்டாம் என கூறியுள்ளனர்.

அருண் விஜய்யை ஹீரோவாக போட வேண்டாம்
அதுவரை தொடர் தோல்விப் உங்களை கொடுத்துவந்த அருண்விஜய் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் முதல் முறையாக இணைந்த மலை மலை மூலம் ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். முற்றிலும் வித்தியாசமான அதிரடி நாயகனாக களம் இறங்கிய அருண் விஜய்க்கு இந்த திரைப்படம் நல்ல ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. மலை மலை வெற்றியை தொடர்ந்து உடனடியாக ஏ வெங்கடேஷ் மற்றும் அருண்விஜய் இரண்டாவது முறையாக மாஞ்சா வேலு என்ற படத்தில் இணைந்தனர் இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டடித்தது என இயக்குநர் ஏ வெங்கடேஷ் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











