இதுதான் உங்க தேச பக்தியா?.. சர்ச்சையில் சிக்கிய அக்‌ஷய் குமார்

மும்பை: வட அமெரிக்க நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க செல்லவிருக்கும் அக்‌ஷய்குமார் அதுகுறித்த வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதனைக் கண்ட பலர் அக்‌ஷய் குமாரை கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அக்‌ஷய் குமார். ஹிந்தியில் பல ஹிட் படங்களை கொடுத்திருக்கும் அக்‌ஷய் தமிழில் 2.0 திரைப்படத்தில் நடித்தார். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து மெகா ஹிட்டான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக 2.0 படம் உருவானது. அதில் வில்லனாக அக்‌ஷய் குமார் நடித்தார்

சர்ச்சை நாயகன் அக்‌ஷய் குமார்

சர்ச்சை நாயகன் அக்‌ஷய் குமார்

நடிப்பில் எவ்வளவுக்கு எவ்வளவு பேசப்பட்டாரோ அதே அளவு சர்ச்சைகளில் சிக்கியும் அக்‌ஷய் குமார் பேசப்படுவதுண்டு. உடலுக்கு கேடு விளைவிக்கும் பான் மசாலா விளம்பரத்தில் அவர் நடித்ததன் மூலம் மிகப்பெரிய எதிர்வினையை சமீபத்தில் அக்‌ஷய் சந்தித்தார். இதனையடுத்து அதுகுறித்து மன்னிப்பு கேட்ட அக்‌ஷய், " கடந்த சில நாள்களாக ரசிகர்களின் எதிர்ப்பு அலை எனக்கு நன்றாக புரிகிறது. இனிமேல் புகையிலை பொருள்களின் விளம்பரத்தில் நடிக்கமாட்டேன்" என தெரிவித்திருந்தார்.

பிரதமரை பேட்டி எடுத்த அக்‌ஷய் குமார்

பிரதமரை பேட்டி எடுத்த அக்‌ஷய் குமார்

இதற்கிடையே நடிகர் அக்‌ஷய் குமார் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலின்போது பிரதமர் நரேந்திர மோடியையும் பேட்டி எடுத்தார். அதனையடுத்து அவர் பாஜகவின் ஆதரவாளரா என பலர் கேள்வி எழுப்பினர்.

அதேசமயம், பாஜகவினர் திரைப்படங்களை சர்ச்சையாக்கியது குறித்து சில வாரங்களுக்கு முன்பு பேசியிருந்த அக்‌ஷ்ய குமார், "நாங்கள் திரைப்படங்களை உருவாக்கி தணிக்கைக்கு அனுப்புகிறோம். பிறகு யாரோ ஒருவர் ஏதோ சொல்கிறார். அது குழப்பமாகிவிடும்" என கூறியிருந்தார். மேலும் பிரதமர் மோடி இந்தியாவின் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவர் எனவும் புகழாரம் சூட்டியிருந்தார்.

வட அமெரிக்காவில் நடிகைகளுடன் நிகழ்ச்சிக்கு செல்லும் அக்‌ஷய்

வட அமெரிக்காவில் நடிகைகளுடன் நிகழ்ச்சிக்கு செல்லும் அக்‌ஷய்

இந்தச் சூழலில் நடிகைகள் திஷா பதானி, மௌனி ராய், நோரா, சோனம் பாஜ்வா உள்ளிட்ட நடிகைகளுடன் நடிகர் அக்‌ஷ்ய் குமார் வரும் மார்ச் மாதம் வட அமெரிக்கா செல்லவிருக்கிறார். அங்கு, அட்லாண்டா, நியூ ஜெர்சி, டல்லாஸ், ஒர்லாண்டோ, ஓக்லாந்து ஆகிய இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவிருக்கிறார். அதுகுறித்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் அக்‌ஷய் குமார்.

இதுதான் தேசபக்தியா என அக்‌ஷயை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

இதுதான் தேசபக்தியா என அக்‌ஷயை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

இந்நிலையில் அந்த வீடியோவில் அக்‌ஷய் குமார் உலக உருண்டையின் இந்திய வரைபடத்தில் செருப்பு காலுடன் இருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இதனைக் கண்ட பலர் ஊருக்கெல்லாம் தேச பக்தி எடுக்கும் பாலிவுட்டில் இருக்கும் ஒரு நடிகரின் தேசபக்தி இதுதானா என அக்‌ஷய்குமாரை கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X