மகனுக்கு வாழ்த்துகூட சொல்லாத நடிகர்.. எல்லாத்துக்கும் நடிகைகள் பஞ்சாயத்துதான் காரணமோ..?
சென்னை: மகனுக்கு வாழ்த்துக்கூட சொல்லாத நடிகரைப் பற்றித்தான் கோலிவுட்டில் பலரும் பேசிவருகிறார்கள். இந்தப் பஞ்சாயத்துக்கு காரணமே அந்த நடிகைகள்தான் என்றும் கூறப்படுகிறது.
கோலிவுட்டில் அந்த நடிகர்தான் இப்போதைக்கு நம்பர் 1 என்று பலரும் கூறுகிறார்கள். ஏனென்றால் அவரது படங்கள் கண்ட்டெண்ட் ரீதியாக அடி வாங்கினாலும் வசூல் ரீதியாக மாஸ் காட்டி நூறு கோடி ரூபாயை வசூலிக்கிறதாம். அதனால் உச்ச நடிகரின் நாற்காலிக்கூட தற்போது ஆட்டத்தில் இருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள்.

சுற்றும் பஞ்சாயத்து: இந்த நடிகருக்கு போட்டி நடிகர் 'வாழா என் வாழ்வை வாழவே' என பயணம் சென்றுகொண்டிருக்க இதுதான் நேரம் என்று கருதிய நடிகர் உச்ச நடிகரை தன்னுடைய போட்டியாளராக நினைத்துக்கொண்டிருக்கிறார். அதன் வெளிப்பாடாகத்தான் சமீபத்திய நிகழ்வுகளும் இருந்தன. இது ஒருபுறம் இருக்க நடிகரின் பெர்சனல் பக்கங்கள் கொஞ்சம் கிழிய ஆரம்பித்திருப்பதாகவும் பேசப்படுகிறது.
வாரிசு நடிகை: அதாவது வாரிசு நடிகையை தனது கட்டுப்பாட்டில் அவர் வைத்திருக்கிறார் என கடந்த சில மாதங்களாகவே கிசுகிசு ஓடியது. ஆனால் சிங்கம் படத்தில் நடித்த பிறகு 'பழைய குருடி கதவை திறடி' என்பதற்கேற்ப பழைய காதல் தீயில் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறாராம் நடிகர். இதன் காரணமாக அவரது மனைவி தனது மகன், மகள் ஆகியோருடன் வெளிநாட்டில் தன்னுடைய பிறந்த வீட்டிலேயே செட்டில் ஆகிவிட்டாராம்.
களமிறங்கிய மகன்: நிலைமை இப்படி இருக்க நடிகரின் இந்த போக்குக்கு அவருடைய அட்மினும், எல்லாமுமாக இருக்கும் வெள்ளை புள்ளிதான் காரணம் என நடிகரின் மகன் கருதி அவர்களை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கியதாகவும் அண்மையில் ஒரு தகவல் பரவியது. அதுமட்டுமின்றி தந்தையுடனும் பேச்சுவார்த்தைய அவர் நிறுத்தி பல மாதங்கள் ஆகின்றனவாம்.
அறிமுகம்: சமாதான பேச்சுவார்த்தைக்கு நடிகரின் மாமனார் வீடு தயாராக இருந்தாலும் மகன் ரொம்பவே காண்டில் இருக்கிறாராம். இதற்கிடையேத்தான் பிரபல தயாரிப்பு நிறுவனம் நடிகரை வைத்து முதல் படமாக ஆயுதம் படத்தை தயாரித்தது. அப்போது சில பிரச்னைகள் எழுந்தன. இதனால் நடிகர் அந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு அதன் பின் கால்ஷீட்டையே கொடுக்கவில்லை. முக்கியமாக அந்தப் படத்தின் பிரச்னையின்போது நடிகரை தயாரிப்பு நிறுவனம் சில விஷயங்களில் அவமதிக்கவும் செய்துவிட்டதாம்.
எனவே அந்த நிறுவனத்தின் மீது உச்சக்கட்ட கோபத்தில் இருக்கிறாராம் நடிகர். ஆனால் நடிகரின் மாமனார் வழி சொந்தமும் அந்த நிறுவனமும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள். இதன் காரணமாக நடிகரின் மாமனார் வீடு அந்த நிறுவனத்திடம் சாதுர்யமாக காய் நகர்த்தியிருக்கிறது. அதன்படி எங்கள் வாரிசை உங்கள் பேனரில்தான் அறிமுகப்படுத்த வேண்டும் என சொல்லியிருக்கிறது.
காண்டு ஏத்திய நிறுவனம்: கால்ஷீட் கொடுக்காத நடிகரை காண்டு ஏத்த சமயம் பார்த்திருந்த நிறுவனமும் ஒத்துக்கொண்டு மகனை அறிமுகமும் செய்துவிட்டது. அதேபோல் தந்தை தவறான வழியில் செல்வதாக நினைத்திருக்கும் மகனும் எதையும் யோசிக்காமல் நிறுவனம் கொடுத்த அக்ரீமெண்ட்டில் கையெழுத்தும் போட்டுவிட்டார்.
ஆனால் தனது மகன் இந்த நிறுவனத்தின் கீழ் அறிமுகமாவார் என்பதை நடிகர் ஒரு சதவீதம்கூட எதிர்பார்க்கவே இல்லையாம். தன்னை அவமானப்படுத்திய நிறுவனத்திடம் மகன் தஞ்சம் அடைந்திருப்பதை இண்டஸ்ட்ரியில் தனக்கு ஏற்பட்ட கௌரவ குறைச்சலாகவே நினைக்கிறாராம் நடிகர். அதன் காரணமாகத்தான் மகனின் அறிமுகத்தை வாழ்த்தியோ, ஆசீர்வதித்தோ ஒரு ட்வீட்டைக்கூட நடிகர் போடவில்லையாம்.


Click it and Unblock the Notifications











