சும்மாவே பார்ட்டி பண்ணுவோம்.. இதுல கல்யாணம்னா சொல்லவா வேணும்.. பிரேம்ஜி கொடுத்த பேச்சுலர் பார்ட்டி!
சென்னை: இயக்குநரும் இசையமைப்பாளருமான கங்கை அமரனின் இளைய மகன் பிரேம்ஜியின் திருமணம் வரும் ஜூன் 9-ஆம் தேதி திருத்தணியில் நடைபெறுகிறது. காதலித்த பெண்ணை நடிகர் பிரேம்ஜி திருமணம் செய்து கொள்ள உள்ள நிலையில் தனது நண்பர்களுக்கு பேச்சுலர் பார்ட்டி வைத்துள்ளார். ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் அதில் பங்கேற்றுள்ள நிலையில் அதன் புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
நடிகர் சிம்புவின் நண்பரான பிரேம்ஜி சிம்புவைப் போலவே இதுவரை முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே சிம்புவுக்கு திருமணம் எப்போது என்கிற கேள்வியையும் சிம்புவுக்காக பெண்ணை தேடும் பணியில் அவரது பெற்றோர்களும் ஈடுபட்டு உள்ளனர்.

ஆனால், பெற்றோர்களுக்கு அந்த கவலையை வைக்காமல் பிரேம்ஜி தனக்கான பெண்ணை தேர்வு செய்து காதலித்து வந்த நிலையில் வரும் ஜூன் 9-ஆம் தேதி எளிமையான முறையில் திருத்தணியில் திருமணத்தை செய்து கொள்ள உள்ளார்.
லீக்கான திருமண அழைப்பிதழ்: நடிகர் பிரேம்ஜி இந்து என்கிற பெண்ணை திருமணம் செய்து கொள்ள போவதாக திருமண பத்திரிகை ஒன்று சமூக வலைதளத்தில் கசிந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. உடனடியாக பதறி அடித்து ஓடி வந்த வெங்கட் பிரபு இது திருத்தணி கோயிலில் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொள்ளும் மிகவும் எளிமையான திருமணம் ரசிகர்கள் மற்றும் மீடியாக்கள் யாரும் வரவேண்டாம் என்றே கோரிக்கை வைக்கும் அளவுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரேம்ஜிக்கு வாழ்த்து: அண்ணன் வெங்கட் பிரபு இயக்கத்தில் பல்வேறு படங்களில் நடித்து வந்த பிரேம்ஜி சத்யசோதனை படத்தில் தனியாக ஹீரோவாகவும் நடித்திருந்தார். தளபதி விஜய் நடித்து வரும் கோட் படத்திலும் அண்ணன் இயக்கத்தில் பிரேம்ஜி நடித்து வரும் நிலையில், அவருக்கு திருமணமாக போகிறது என்கிற தகவல் வெளியானதும் ரசிகர்கள் பிரேம்ஜிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பேச்சுலர் பார்ட்டி: வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி என படமே உருவாக்கப்பட்டு பல ஆண்டுகளாக வெளியாகாமல் கிடப்பில் கிடக்கின்றது. சென்னை 600028, சரோஜா, கோவா, மங்காத்தா என பல படங்களில் பார்ட்டியை மையமாக வைத்து வேர் இஸ் தி பார்ட்டி என பாட்டுப் பாடிய பிரேம்ஜி எங்கவூட்ல பார்ட்டி என தனது திருமணத்தை முன்னிட்டு பேச்சுலர் பார்ட்டி வைத்துள்ளார். அதன் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

பல நடிகர்கள்: வெங்கட் பிரபு படங்கள் என்றாலே ஏகப்பட்ட நடிகர்கள் அந்த படத்தின் நடித்து வருவார்கள். சென்னை 600028 படத்திலிருந்து கும்பல் கும்பலாக நடிகர்களை நண்பர்களாக கொண்டிருக்கும் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜியின் வீட்டு பார்ட்டியில் ஜெய், அரவிந்த் ஆகாஷ், வைபவ், எஸ்பிபி சரண், மகேந்திரன், சுனில் ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஜூன் 9ம் தேதி திருமணமாகவுள்ள பிரேம்ஜிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
கோட் வருது: வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி விஜய்யின் கோட் படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ள நிலையில், விஜய்யின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு கோட் படத்தின் செகண்ட் சிங்கிள் மற்றும் டீசர் உள்ளிட்ட சர்ப்ரைஸ்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











