சரியில்லாத சம்மர்.. நிதிப் பிரச்சினையில் பல படங்கள்.. ரிலீஸ் தாமம்.. தயாரிப்பாளர்கள் சோகம்!

சென்னை: வழக்கத்தை விட கோடை விடுமுறையில் அதிக படங்கள் வெளியாவது வழக்கம். வெள்ளிக்கிழமை 10-ம் தேதி 9 படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டன.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 100, அயோக்யா திரைப்படங்கள், பைனான்ஸ் பிரச்சனையால் சொன்னபடி ரிலீஸ் ஆகாமல் மறுநாளே வெளியாகின. ஒரு நடிகனாக நான் அனைத்து வேலைகளையும் சரியாகத்தான் செய்தேன்.

எனது கடின உழைப்புக்குக் கிடைத்த பரிசு எனது அயோக்யா' படம் வெளியாகவில்லை என விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்திருந்தார். தயாரிப்பாளர் சங்க தலைவரான அவர் படத்துக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

தொடர் கதை

தொடர் கதை

இது நிலைமை இதோடு முடிந்துவிடும் என பார்த்தால் அடுத்த வாரமும் தொடர்கிறது. விஜய் சேதுபதி, அஞ்சலி நடிப்பில் உருவாகி உள்ள ‘சிந்துபாத்' மற்றும் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் ஜோடியாக நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய இரு திரைப்படங்களையும் அடுத்த வாரம் திரைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடக்கின்றன

காசு பாக்கி

காசு பாக்கி

இந்த 2 படங்களையும் வெளியிடுவதாக இருந்த பட நிறுவனம் பாகுபலி 2 படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்டது. பாகுபலி வினியோகத்தில் இந்த நிறுவனத்துக்கும், பாகுபலி தயாரிப்பாளருக்கும் இடையே நிலுவைத்தொகை உள்ளதால் தங்களுக்கு தரவேண்டிய ரூ.17 கோடியை வழங்காமல் படங்களை வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று பாகுபலி தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஐதராபாத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

தடை

தடை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இரண்டு படங்களையும் வெளியிட இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார். இதனால் சிந்துபாத், எனை நோக்கி பாயும் தோட்டா படங்களை திட்டமிட்டபடி திரைக்கு கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. பல சிக்கலை கட‍ந்து, இப்போ வரும், அப்போ வரும் என 2 ஆண்டுகளாக ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எனை நோக்கி பாயும் தோட்டா, இப்போது ரிலீஸ் வரை வந்து, பிரச்சனையில் சிக்கியுள்ளது.

நேரமே சரியில்லை

நேரமே சரியில்லை

விஜய் சேதுபதியும் 96 படமும் பல பிரச்சனைகளை கடந்தே ரிலீஸ் ஆனது. தற்போது சிந்துபாத்திற்கும் அதே நிலைமை ஏற்பட்டுள்ளது.

கோடை விடுமுறைக்காக காத்திருந்த சினிமா ரசிகர்களுக்கு இந்த கோடை ஏமாற்றமே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X